பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.. இளம் அமைச்சர் முதல் வயதான அமைச்சர் வரை.. முழு பட்டியல் இதோ..!

By Raghupati RFirst Published Jun 9, 2024, 8:12 PM IST
Highlights

லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இன்று பிரதமராக மோடி பொறுப்பேற்றார். மேலும் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களின் முழு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் இன்று நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார். மீண்டும் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார் நிர்மலா சீதாராமன்.

புதிய கேபினட் அமைச்சர் மனோஹர் லால் கட்டார் ஹரியானாவின் முதல்வராக இருந்தவர். இரண்டாவது முறையாக கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார் பாஜக தலைவர் நட்டா. 2014-ல் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

Latest Videos

கேபினட் மினிஸ்டராக பதவி ஏற்கும் இரண்டாவது பெண் அன்னபூர்ணா தேவி. பிஹார் பாஜக எம்.பி. ஏற்கனவே MOS கல்வி அமைச்சராக இருக்கிறார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் நாயுடு. கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார்.

மோடி அரசின் இளைய அமைச்சர் இவர்தான். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி பதவியேற்றார். மனோகர் லால் மத்திய அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார். என்.டி.ஏ அரசாங்கத்தில் பாஜக தலைவர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

இன்று பதவியேற்ற மத்திய அமைச்சரவையில், 27 பேர், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்கள். 10 பேர் பட்டியல் பிரிவினர், 5 பேர் பழங்குடியினர், 5 பேர் சிறுபான்மையினர் அடங்குவார்கள்.

பதவியேற்ற மத்திய அமைச்சர்களின் பட்டியல்:

1)பிரதமர் மோடி
2)ராஜ்நாத் சிங்
3)அமித்ஷா
4)நிதின் கட்கரி
5)ஜே.பி.நட்டா

6)சிவராஜ் சிங் செளகான்
7)நிர்மலா சீதாராமன்
8)ஜெய்சங்கர்
9)மனோகர்லால் கட்டார்
10)H.D.குமாரசாமி (கூட்டணி)

11)பியூஸ் கோயல்
12)தர்மேந்திர பிரதான்
13)ஜித்தன் ராம் மாஞ்சி (கூட்டணி)
14)ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (நிதிஷ்குமார் கட்சி)
15)சர்பானந்த சோனாவால்
16)டாக்டர் வீரேந்திர குமார்
17)ராம்மோகன் நாயுடு (தெலுங்குதேசம்)
18)பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி
19)ஜுவல் ஓரம்
20)கிரிராஜ் சிங்

21)அஸ்வினி வைசவ்
22)ஜோதிர் ஆதித்ய சிந்தியா
23)பூபேந்திர யாதவ்
24)கஜேந்திரசிங் ஷெகாவத்
25)அன்னபூர்ணா தேவி
26)கிரண் ரிஜிஜூ
27)ஹர்தீப்சிங் பூரி
28)மன்சுக் மாண்டவியா
29)கிஷன் ரெட்டி
30)சிராக் பஸ்வான் (கூட்டணி)

31)சி,ஆர்.பாட்டீல்
32)இந்திரஜித் சிங்
33)ஜிதேந்திர சிங்
34)அர்ஜூன் ராம் மேக்வால்
35)பிரதாப் ராவ் ஜாதவ் (ஏக்நாத் ஷிண்டே)
36)ஜெயந் செளவுத்ரி (கூட்டணி)
37)ஜிதின் பிரசாத்
38)ஸ்ரீபாத் யசோ நாயக்
39)பங்கஜ் செளத்ரி
40)கிருஷ்ணன் பால்

41)ராம்தாஸ் அத்தவாலே (கூட்டணி)
42)ராம்நாத் தாஹூர் (நிதிஷ்குமார் கூட்டணி)
43)நித்தியானந்த ராய்
44)அனுப்பிரியா பட்டேல் (கூட்டணி)
45)வீரன்னா சோமன்னா
46)சந்திர சேகர் பெம்மாசானி (தெலுங்குதேசம்)
47)எஸ்.பி.சிங் பாஹேல்
48)ஷோபா கரந்த்லாஜே
49)கீர்த்தி வர்தன் சிங்
50)பி.எல்.வர்மா

51)சாந்தனு தாக்கூர்
52)சுரேஷ் கோபி (கேரள நடிகர்)
53)எல்.முருகன்
54)அஜய் டம்டா
55)பண்டி சஞ்சய்குமார்
56)கமலேஷ் பஸ்வான்
57பஹிரத் செளத்ரி
58)சதீஷ் சந்திர துபே
59)சஞ்சய் சேட்
60)ரவ்னீத் சிங்

61)துர்காதாஸ் உய்கே
62)ரக்சா நிகில் கட்சே
63)சுகாந்து மஜூம்தார்
64)சாவித்ரி தாக்கூர்
65)தோஹன் சாஹூ

66)ராஜ்பூசன் செளத்ரி
67)பூபதிராஜூ ஸ்ரீநிவாஸ்
68)ஹர்ஸ் மல்கோத்ரா
69)நிமுபென் பாம்பனியா
70)முரளிதர் மொஹோல்

71)ஜார்ஜ் குரியன்
72)பவித்ர மார்கரீட்டா

2026ல் விஜயின் தவெகவுக்கு செக்.. கமல் உடன் திமுக போட்ட பிளான்.. குறுக்கே வந்த பாஜக + நாதக கூட்டணி..

click me!