
குடியரசுத் தேர்தல் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி போர்ச்சுகல், நெதர்தல்லாந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக மோடி போர்ச்சுகல் சென்றார்.
வாசிங்டன் விமானநிலையத்திற்குச் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முன்னணி நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட மாநாட்டில் மோடி பங்கேற்றனர். இதில் கூகுள் நிறுவன செயல் தலைவர் சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்பம் முதல் அடித்து நொறுக்கிய மோடி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் அனைத்து பிரச்சனைகளையும் சுஷ்மா தீர்ப்பதாக பாராட்டு தெரிவித்த அவர், சமூக வலைத்தளங்கள் ஒரு துறைக்கு எவ்வளவு பயன்படுகிறது என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிக்காட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணி அளவில் வெள்ளை மாளிகைக்கு மோடி சென்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவரது மனைவி மெலேினியா ஆகியோர் வாசலுக்கே வந்து மோடியை வரவேற்று அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப் அளித்த விருந்தில் மோடி பங்கேற்றார்.
சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி முதலில் பேசினார்.” “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவற்கு முன்னுரி அளிப்போம். இது தொடர்பாக டிரம்பும் நானும் இணைந்து ஆலோசனை நடத்தினோம்.
இதனைத் தொடர்ந்து பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், “ இருநாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.அதை ஒழிக்க முழு மூச்சுடன் பணியாற்றவுள்ளோம்.
ராணுவ ரீதியாகவும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். இநதியா போன்ற ஜனநாயக நாட்டின் தலைவரை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியாவின் மக்களையும், கலாச்சாரத்தையும் பெரிதும் மதிக்கிறேன்.
இரு நாட்டு அரசியலமைப்பும் மக்களுக்காக என்ற ஜனநாக வார்த்தைகளில் தான் தொடங்குகின்றன” இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டார்.