பிரதமர் நரேந்தி மோடி அண்மை காலமாக ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் விவரங்களை இங்கு காண்போம்.
ஏப்ரல் 8 ஆம் தேதி, செகந்திராபாத் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சமீப காலங்களில், பிரதமர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அர்ப்பணித்து அடிக்கல் நாட்டியுள்ளார் என்பதை பார்க்கும் போது இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல. பிரதமரின் பெரிய தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதி என்பது தெளிவாகிறது.
ஜூலை 2021 இல், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காந்திநகர் தலைநகர் ரயில் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார். நவம்பர் 2021ல், போபாலில் மறுவடிவமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மே 2022ல், தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஜூன் 2022 இல், குஜராத்தில் உத்னா, சூரத், சோம்நாத் மற்றும் சபர்மதி ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டினார்.
மதுரை மெட்ரோ ரயிலுக்கான கட்டுமானப் பணிகள் 2024ல் துவக்கம் - நிர்வாக இயக்குநர் தகவல்
அதே மாதத்தில், கர்நாடகாவில் பெங்களூரு கேன்ட் மற்றும் யஷ்வந்த்பூர் ரயில் நிலையங்களை மறுசீரமைக்க அடிக்கல் நாட்டினார். அதோடு, இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் - பையப்பனஹள்ளியில் உள்ள சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் - இது நவீன விமான நிலையத்தின் வரிசையில் உருவாக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜூலை 2022ல், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி ரயில் நிலையத்தை மறுவடிவமைப்பு செய்வதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். செப்டம்பர் 2022 இல், கேரளாவில் எர்ணாகுளம், எர்ணாகுளம் டவுன் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டினார். அதே மாதத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, புது தில்லி மற்றும் அகமதாபாத் ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய ஒப்புதல் அளித்தது.
பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி
நவம்பர் 2022 இல், ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் பிரதமர் அவர்களால் நாட்டப்பட்டது. 2022 டிசம்பரில், மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் அஜ்னி (நாக்பூர்) ரயில் நிலையங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்புக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த ஆண்டு ஜனவரியில், மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மறுவடிவமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பிப்ரவரி 2023 இல், கர்நாடகாவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெலகாவி ரயில் நிலைய கட்டிடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மார்ச் 2023 இல், ஸ்ரீ சித்தரூத்த சுவாமிஜி ஹுப்பள்ளி நிலையத்தில் உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் அர்ப்பணித்தார்.