Gujarat Assembly Elections 2022: குஜராத்தில் வானதி சீனிவாசன்; கை கொடுக்குமா வடக்கு தெற்கு இணைப்பு?

By Dhanalakshmi GFirst Published Nov 30, 2022, 2:31 PM IST
Highlights

வடக்கு, தெற்கு என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கலாச்சாரம், பண்பாடு, தாய் மொழி மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மேலும், காசி தமிழ் சங்கமம் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் என்றார்.

தற்போது குஜராத் மாநிலம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்தக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் தென்னிந்திய மகளிர் அணி நிர்வாகிகள் வடஇந்திய மகளிர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 150 பெண் நிர்வாகிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். 

குஜராத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வடஇந்திய நிர்வாகி ஒருவர், தென்னிந்திய நிர்வாகி ஒருவர் என்று இருவர் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குஜராத் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று இருக்கிறார். அவர் நியூஸ் 18 ஆங்கில சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், ''மக்களின் ஆதரவு என்பது நிலையானது இல்லை. சில நேரங்களில் அலை இருக்கும். சில நேரங்களில் இருக்காது. ஆனால் அமைப்பு வலுவாக இருந்தால், எந்த அலையையும் தாங்கிக் கொள்ள முடியும். அதனால்தான், பாஜக அமைப்பை கட்டியெழுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விஷயத்தில் பெண்களை ஒதுக்கி விட முடியாது.

ஜிபிஎஸ், கேமிராவுடன் கரும்பருந்துகள், நாய்களுக்கு ராணுவம் பயிற்சி: எல்லைப் பாதுகாப்புக்கு புதிய உத்தி!

Some memorable glimpses from Surat visit . pic.twitter.com/bg49Bl4pN8

— Vanathi Srinivasan (@VanathiBJP)

வட இந்தியாவைச் சேர்ந்த நிர்வாகிகள், தெற்கில் இருக்கும் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இது இருதரப்புக்கும் இடையிலான சிறந்த புரிதலை உருவாக்கும் முயற்சியாகும். வட இந்தியாவைச் சேர்ந்த பலர் தென்னிந்தியா என்றால் மதராசி என்று நினைக்கின்றனர். ஆனால் தென்னிந்திய மகளிர் நிர்வாகிகள் இங்கு வந்து வடஇந்திய பெண்களுடன் சேர்ந்து பல நாட்கள் கட்சிப் பணிகளைச் செய்யும்போது, தென்னிந்தியா என்பது மதராஸ் மட்டும் இல்லை என்பதை எடுத்துச் சொல்கிறார்கள். மெட்ராஸ் என்பது தமிழ்நாடு. அங்கு மக்கள் தமிழ் பேசுகின்றனர். கேரள மக்கள் மலையாளம் பேசுகின்றனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மக்கள் தெலுங்கு பேசுகின்றனர் என்பதை புரிய வைக்கின்றனர்.  

நன்கொடை பெற்று கோடிகளில் புரளும் கட்சிகள்: ரூ. 614.53 கோடியுடன் பாஜக முன்னிலை; காங்கிரசுக்கு ரூ. 95.46 கோடி!!

முக்கியமாக எட்டு மாவட்டங்களில் நகர்ப்புற அலுவலகப் பணியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மொழிக்கும், எங்கள் அலுவலகப் பணியாளர்களை அனுப்புகிறோம். எங்களிடம் பல ஒடிசா மக்கள் உள்ளனர், எனவே ஒடிசாவைச் சேர்ந்த எங்கள் தேசிய அலுவலகப் பொறுப்பாளர் சூரத்தில் பிரச்சாரம் செய்கிறார். குஜராத்தில் 120 பெண்கள் பணிபுரிகின்றனர். எனவே, நாங்கள் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், உடனடியாக கட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். மேலும் உள்ளூர் அமைப்புக்கும் தெரியப்படுத்துகிறோம்''  என்கிறார்.   

Delighted to be among the tribal sisters at Tapi District, Gujarat.

Sharing glimpses of memorable moments from my organisational visit. ⁦⁩ ⁦⁩ ⁦⁩ pic.twitter.com/0DJcvBWQPi

— Vanathi Srinivasan (@VanathiBJP)
click me!