ஜிபிஎஸ், கேமிராவுடன் கரும்பருந்துகள், நாய்களுக்கு ராணுவம் பயிற்சி: எல்லைப் பாதுகாப்புக்கு புதிய உத்தி!

By Pothy RajFirst Published Nov 30, 2022, 11:08 AM IST
Highlights

எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிக்காகவும், பாகிஸ்தான் பகுதியிலிருந்து வரும் ட்ரோன்களைக் கண்காணிக்கவும், கரும்பருந்துகளுக்கும், நாய்களுக்கும் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது

எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிக்காகவும், பாகிஸ்தான் பகுதியிலிருந்து வரும் ட்ரோன்களைக் கண்காணிக்கவும், கரும்பருந்துகளுக்கும், நாய்களுக்கும் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது

கரும்பருந்துகளின் காலில் ஜிபிஎஸ் கருவிகளையும், கழுத்தில் கேமிராவையும் கட்டி எல்லைப்பகுதிகளில் பறக்க ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. இதன் மூலம் எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களையும், கழுகு பறக்கும் இடங்களை ஜிபிஎஸ் மூலம் அறியவும் முடியும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்; புதிய அறிவிப்பு!!

இதற்காக மீரட்டில் உள்ள ராணுவத்தின் ரிமவுன்ட் வெட்னரி கார்ப் சென்டர் மூலம் கரும்பருந்துகள், நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரகாண்டில் உள்ள அவுலி ராணுவ மையத்தில் இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் கூட்டாக இணைந்து யுத் அபியாஸ் என்ற திட்டத்தில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக கரும்பருந்துகள், நாய்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து இந்திய ராணுவம் செயல்விளக்கம் செய்துகாட்டியது.

58 வயது முதியவர் வயிற்றில் இருந்து 187 நாணயங்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்: கர்நாடக மருத்துவர்கள் சாதனை

கரும்பருந்துகள் மூலம் மிகவும் உயரமான எல்லைப் பகுதிகள், மலைப்பிரதேசங்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்காக  பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கரும்பருந்தின் காலில் ஜிபிஎஸ் கருவி கட்டப்பட்டு, கழுத்தில் கேமிரா பொறுத்தப்படுகிறது.

இந்த பயிற்சியின்போது ட்ரோன்களை பறக்கவிட்டு, கரும்பருந்துகளையும் பறக்கவிட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது, கரும்பருந்து தனது இறக்கையாலும், கால்களாலும் ட்ரோன்களை தாக்கி, கீழே விழச்செய்தது.

இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கரும்பருந்துகள், நாய்களுக்கு எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள ஏராளமான நாடுகள், அமெரிக்கா பறவைகளை எல்லைப்புறக் கண்காணிப்புக்கு பயன்படுத்துகின்றன, ஏதேனும் ட்ரோன்கள் வந்தால் இடைமறித்து தாக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது

ஆந்திர முதல்வர் தங்கை ஷர்மிலா ரெட்டி அமர்ந்திருந்த காரை கிரேனில் இழுத்துச்சென்ற ஹைதராபாத் போலீஸ்

கரும்பருந்துகளுக்கு வழங்க வேண்டிய பயிற்சி முழுமையாக முடிந்தபின், அவை ராணுவத்தில் சேர்க்கப்படும். இதன் மூலம் எல்லைப்பகுதியில் ட்ரோன்கள்ஏதேனும் பறந்தால் அதைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல் அதைதாக்கி கீழே விழச்செய்யும்” எனத் தெரிவித்தார்

கடந்த சில மாதங்களாக பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் சுட்டுவீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் “கரும்பருந்துகள் அழிந்துவரும் பறவை இனம் அல்ல. அதனால்தான் இதை ராணுவத்தில் சேர்த்தோம். இந்த கரும்பருந்து பறக்கும்போதே எதிரே வரும் பறவையை வானிலேயே தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதால் இதை தேர்வுசெய்தோம்.

இதேபோலத்தான் ஜெர்மன் ஷெப்பர்டு நாயையும் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து வருகிறோம். மனிதர்களைவிட நாய்கள், சத்தத்தை கூர்ந்து கவனிக்கும் தன்மை கொண்டது. அவ்வாறு சத்தம் ஏதும் வந்தால் உடனடியாக படையினரை உஷார்படுத்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாய்களுக்கும், கரும்பருந்துகளுக்கும் ராணுவத்தில் சேர்த்த்து பயிற்சி அளிக்கும் திட்டம் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது இன்னும் முடியவில்லை” எனத் தெரிவித்தார்
 

click me!