சிறுமி பலாத்காரம்..எம்எல்ஏ கைது..!!

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
சிறுமி பலாத்காரம்..எம்எல்ஏ கைது..!!

சுருக்கம்

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த மேகாலயா சட்டமன்ற உறுப்பிரை போலீசார் கைது செய்துள்ளனர்.

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேகாலயா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜூலியஸ் கே டோர்பாங் மீது அம்மாநில சிறார் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாராணையின் போது, ஜூலியஸ் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவருக்‍கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்‍கப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில், ஜூலியஸ் கைது செய்யப்பட்டார்.

தற்போது ஷில்லாங் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஜூலியஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை..! புதிய அரசால் ரத்தக் களறியாக மாறிய போராட்டம்..!
நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!