
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 217 இந்திய மீனவர்களை, நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டு அரசு விடுதலை செய்தது. வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியா மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகின்றனர்.
இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் விளைவாக, இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் அவ்வவ்போது விடுதலை செய்கிறது.
இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 218 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைத்தனர்.
இதில் ஒரு மீனவர் மாரடைப்பால் சிறையிலேயே உயிரிழந்தார். இந்நிலையில் மீனவர்கள் அனைவரையும் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. இதையடுத்து விடுதலையான மீனவர்கள் அனைவரும் வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த 10 நாட்களில் இதுவரை 439 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டிசம்பர் 25-ம் தேதி கராச்சி சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.