புது 2000 ரூபாய்களின் மீது படுத்து தூங்கும் ஆர்வக்கோளாறு - ஒரு நோட்டுக்கு நாள் முழுவதும் நிற்கும் ஏழைகள்..

First Published Jan 7, 2017, 1:12 PM IST
Highlights


Demonetisastion - கருப்பு பண ஒழிப்பு.... பாரத பிரதமர் மோடியின் இந்த மோடி மஸ்தான் வேலையால் ஒட்டுமொத்த இந்தியாவே பாதிப்புக்குதான் ஆளாகியிருக்கிறது.

கருப்பு பண ஒழிப்பு முழு தோல்வி என எதிர்கட்சிகள் ஒரு பக்கம் கொக்கரித்து கொண்டிருக்கும் வேளையில்  பாதிக்கப்பட்டது என்னவோ ஏழைகளும் நடுத்தர மக்களும் தான்..

அரசு அனுமதித்த ரூ.2000,4000க்காக மணிக்கணக்கில், நாள் கணக்கில் ஏடிஎம்களில் நின்று நொந்து நூடுல்ஸ் ஆகிபோய் விட்டனர் சாமானியர்கள்.

மணிக்கணக்கில் வரிசையில் நின்றதால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவங்களும் அரங்கேறின.

இந்தளவிற்கு பல கோடி மக்கள் ஒத்தை 2000 ரூபாய் பெறுவதற்காக தங்கள் வேலைகளை விட்டு விட்டு உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் அவதியுற்றனர்.

இது ஒரு புறமிருக்க கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகளுடன் போஸ் கொடுக்கும் ஆர்வகோளாறுகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கட்டு கட்டாக சுவர் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு முன் நின்று தென்னிந்தியாவை சேர்ந்த கணவன் மனைவி போஸ் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஆர்வக்கோளாறு ஒருவன் கையில் தங்கத்தினாலான ப்ரேஸ்லெட் ஒன்றை அணிந்து கொண்டு தனது மெத்தையின் மீது 2000 ரூபாய் நோட்டுகளை பரப்பி கொண்டு அதன் அருகில் படுத்து போஸ் கொடுத்துள்ளான்.

இது ஒத்தை 2000 நோட்டுக்காக மணிக்கணக்கில் நாள் கணக்கில் வரிசையில் நின்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு 2000 ரூபாய் பெறவே இவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது? இது போன்ற ஆர்வகோளாறுகளுக்கு மட்டும் எப்படி புது நோட்டுக்கள் கிடைக்கின்றன என்று நொந்து கொள்கின்றனர்.

click me!