இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவரும் டிஆர்டிஓவின் முன்னாள் தலைவருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து இத்துறையில் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் பெற்றுள்ளார் ஷீனா ராணி. கலாமைப் போலவே இவரும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
இந்தியா திங்கட்கிழமை அக்னி-5 ஏவுகணையின் முதல் கட்ட சோதனையான மிஷன் திவ்யாஸ்திராவை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த சாதனையை அறிவித்த பிரதமர் மோடி டிஆர்டிஓ (DRDO) விஞ்ஞானிகளையும் பாராட்டினார். ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் விஞ்ஞானி ஷீனா ராணி இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
1999ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணை தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறார். MIRV (எம்ஐஆர்வி) தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் சோதனையில் இவரது பங்கு முக்கியமானது. "இந்தியாவைப் பாதுகாக்க உதவும் DRDO-வின் உறுப்பினராக நான் இருக்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன்" என்று அவர் சொல்கிறார்.
undefined
ஏற்கெனவே அக்னி ஏவுகணைகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய இந்தியாவின் புகழ்பெற்ற ஏவுகணை தொழில்நுட்ப வல்லுநரான 'அக்னி புத்ரி' டெஸ்ஸி தாமஸ் வழியில் ஷீனா ராணி செயல்பட்டு வருகிறார்.
57 வயதான ஷீனா ராணி ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்தில் விஞ்ஞானியாக உள்ளார். கணினி அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற இவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முடித்தார்.
தேர்தல் பத்திர வழக்கில் இன்னொரு டுவிஸ்ட்? குடியரசுத் தலைவர் கையில் ஒரே வாய்ப்பு!
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) இந்தியாவின் முதன்மையான சிவில் ராக்கெட்டிரி ஆய்வகத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு பொக்ரான் அணுசக்தி சோதனைக்குப் பிறகு, அவர் DRDO க்கு மாறினார். 1999 முதல் ஷீனா ராணி அக்னி தொடர் ஏவுகணைகளுக்கான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்புகளில் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவரும் டிஆர்டிஓவின் முன்னாள் தலைவருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து இத்துறையில் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் பெற்றுள்ளார் ஷீனா ராணி. கலாமைப் போலவே இவரும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். பின்னர் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை வழிநடத்த DRDO பணிக்குச் சென்றார்.
அவரது வாழ்க்கையை வடிவமைக்க உதவிய மற்றொரு நபர், சில கடினமான ஆண்டுகளில் டிஆர்டிஓவை வழிநடத்திய ஏவுகணை தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் அவினாஷ் சந்தர் ஆவார். டாக்டர் சந்தர் ஷீனா ராணி, "எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார், புதுமைகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார், மேலும் அக்னி ஏவுகணை திட்டத்திற்கான அவரது அர்ப்பணிப்பு அற்புதமானது, நேற்றைய ஏவுகணை அவருக்கு மகுடமாக அமைந்தது" என்று விவரித்தார்.
Jaya Thakur: அரசியல் கட்சிகளை மிரள வைத்த ஜெயா தாகூர்; யார் இவர்? என்ன செய்தார் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், "Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ராவின் வெற்றி எங்களது DRDO விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது'' என்று… pic.twitter.com/GQrfkbLQgP
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இவரது கணவர், பிஎஸ்ஆர்எஸ் சாஸ்திரியும், டி.ஆர்.டி.ஓ.வில் பணிபுரிந்தார். 2019இல் மின்னணு நுண்ணறிவுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக இஸ்ரோவால் ஏவப்பட்ட கௌடில்யா செயற்கைக்கோளின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனையை DRDO நிறைவு செய்துள்ளது. 'மிஷன் திவ்யஸ்த்ரா' என்று பெயரிடப்பட்ட இந்த சோதனை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
DRDO ஆல் உருவாக்கப்பட்ட புதிய ஆயுத அமைப்பு MIRV தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள இலக்குகளைத் தாக்கும் சக்தியைக் உறுதி செய்கிறது. இதன் மூலம், எம்ஐஆர்வி தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனாவுக்குப் பிறகு எம்ஐஆர்வி திறன் கொண்ட ஏவுகணைகளை வைத்திருக்கும் ஆறாவது நாடு இந்தியா.
MIRV பேலோடு என்பது பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஒற்றை ஏவுகணையை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் தனித்தனி இலக்கை தாக்கும் வகையில் இருக்கும். இது 5,000-க்கும் மேற்பட்ட கிமீ சுற்றளவில் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறனை இந்தியாவுக்கு வழங்குகிறது.
ஆழ்கடல் அதிசயம்! நட்சத்திர வடிவ வினோத விலங்கு உள்பட 100 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!