இந்தியாவின் முதல் திருநங்கை அழகி... நமிதாவை தோற்கடித்து அபாரம்!

By vinoth kumarFirst Published Oct 9, 2018, 4:32 PM IST
Highlights

இந்தியாவின் முதல் திருநங்கை அழகிப்போட்டியில் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வீனா சென்ரே பட்டம் வென்று அசத்தியுள்ளார். மும்பையில் திருநங்கைக்கான அழகிப் போட்டி நடைபெற்றது.

இந்தியாவின் முதல் திருநங்கை அழகிப்போட்டியில் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வீனா சென்ரே பட்டம் வென்று அசத்தியுள்ளார். மும்பையில் திருநங்கைக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நமிதா அம்முவை தோற்கடித்து பட்டத்தை வென்றார். 

முன்னாள் சட்டிஸ்கர் பட்டத்தை வென்றுள்ள இவர் ராய்ப்பூரின் மந்திர் ஹசுத் பகுதியில் வசித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் சிறு வயது முதலே தனிமையில் இருந்து வந்ததாக கூறினார். என்னுடன் பழக யாரும் விரும்பமாட்டார்கள். என்னை வைத்து அனைவரும் கேலி செய்வார்கள்" என்றார்.

 

மேலும், தனது பள்ளிப்படிப்பை 5-ம் வகுப்போடு நிறுத்தினார். ஆனால் மற்றவர்களிடம் இருந்ததால் ஏதேனும் செய்யவேண்டும் உறுதி எடுத்தேன். அதற்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றதாகவும் கூறினார். இந்த சாதனை திருநங்கைகளுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்வதாக வீனா சென்ரே தெரிவித்துள்ளார். 

click me!