திருமணத்தன்று எஸ்கேப் மணமகன்! மருமகளுக்கு தாலி கட்டிய மாமனார்!

Published : Oct 09, 2018, 02:47 PM IST
திருமணத்தன்று எஸ்கேப் மணமகன்! மருமகளுக்கு தாலி கட்டிய மாமனார்!

சுருக்கம்

திருமண மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், அவர் தான் காதலித்த பெண்ணோடு திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

திருமண மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், அவர் தான் காதலித்த பெண்ணோடு திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால், 65 வயதாகும் இவர் தன்னுடைய மனகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்படு செய்தார். இவருடைய மகன் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததால், ஆரம்பத்தில் இருந்து இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என கூறியதாக கூறப்படுகிறது.

எனினும் ரோஷன் லால் தன்னுடைய மகனை வற்புறுத்தி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார். திருமண மேடை வரை சென்ற இந்த திருமணத்தில் இருந்து திடீர் என ரோஷனின் மகன் மாயமாகினார்.

இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சுற்றும் முற்றும் மணமகனை தேடியும் அவர் கிடைக்காததால், அதிரடி முடிவு எடுத்தார் ரோஷன் லால்.

அது என்ன தெரியுமா? தன்னுடைய மகனால் ஒரு பெண் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காக, தன்னுடைய மகனுக்கு நிச்சயம் செய்திருந்த பெண்  சுவப்ணா 21  என்ற பெண்ணை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து தனது கவுரவம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சுவப்ணாவின் தந்தையும் இவருடைய முடிவை ஏற்றுக்கொண்டார்.  அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார். மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!