அதிகாலையில் திருவனந்தபுரம் ஏசியாநெட் அலுவலகத்தில் புகுந்து சூறையாடிய நபர் கைது

Published : Aug 14, 2023, 09:51 AM ISTUpdated : Aug 14, 2023, 10:05 AM IST
அதிகாலையில் திருவனந்தபுரம் ஏசியாநெட் அலுவலகத்தில் புகுந்து சூறையாடிய நபர் கைது

சுருக்கம்

திருவனந்தபுரத்தில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் அதிகாலையில் புகுந்து தாக்குதல் நடத்திய நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஏசியாநெட் நியூஸ் நிறுவன அலுவலகம் மீது திங்கள்கிழமை (ஆக. 14) அதிகாலை 5 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் சூரஜ் என்று தெரியவந்திருக்கிறது. அதிகாலையில் ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த அவர் பாதுகாப்பு அறையின் கண்ணாடியை கற்களை வீசி சேதப்படுத்தினார். மேலும், அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடியையும் உடைத்துள்ளார்.

நீண்ட பயணத்தை நேசிப்பவரா? உங்களுக்காகவே இந்திய ரயில்வே இயக்கும் டாப் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

வீட்டு வசதி வாரிய அலுவலகம் முன் சிறிது நேரம் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி சூரஜை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கு முன்பும் திருவனந்தபுரத்தில் உள்ள ஏசியாநெட் நியூஸ் நிறுவன அலுவலகம் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது நினைவூட்டத்தக்கது. கடந்த மார்ச் மாதம் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் நேர்காணல் தொடர்பாக ஏசியாநெட் நியூஸ் வெளியிட்ட செய்தியை அடுத்து எஸ்.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொச்சியில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர்.

பொள்ளாச்சியில் கல்விக் கடன் முகாம்: ஆகஸ்ட் 16இல் நடக்கிறது

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!