இந்தியாவில் 3 ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள், சிறுமிகள்13 லட்சம்; தமிழ்நாட்டில் இத்தனை பேரா? அதிர்ச்சி தகவல்!!

By Asianet Tamil  |  First Published Jul 31, 2023, 10:30 AM IST

இந்தியாவில் 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 2,51,430 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ராஜ்யசபாவில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 2019 - 2021 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 57,920 பேர் காணாமல் போயுள்ளனர்.


இந்தியாவில் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் சுமார் 13.13 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர். மத்தியப் பிரதேசம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்களும், இதையடுத்து மேற்குவங்கத்தில் அதிகமான பெண்களும் காணாமல் போயுள்ளனர் என்று  உள்துறை அமைச்சகம் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து 2019ஆம் ஆண்டில் 4022 சிறுமிகளும், 11636 பெண்களும், 2020ஆம் ஆண்டில் 4420 சிறுமிகளும்,  13878 பெண்களும், 2021ஆம் ஆண்டில்    5949 சிறுமிகளும், 18015 பெண்களும் காணாமல் போயுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 2019 - 2021 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 57,920 பேர் காணாமல் போயுள்ளனர்.

Tap to resize

Latest Videos

உல்லாசத்துக்கு அழைத்த தம்பி மகன்.. இணங்க மறுத்த அத்தையை போட்டுத்தள்ளிய சம்பவம் - சென்னையில் அதிர்ச்சி

உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஜூலை 26 அன்று ராஜ்யசபாவில் தெரிவித்திருந்த தகவலில், ''2019 முதல் 2021 வரை இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 2,51,430 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை முறையே 82,084 மற்றும் 3,42,168 ஆகவும், 2020 ஆம் ஆண்டில், 79, 233 சிறுமிகளும், 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளனர்'' என்று தெரிவித்தார். 

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இணையதளத்தின்படி, ''2019ஆம் ஆண்டில் 82,619 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். மேலும் 49,436 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே ஆண்டில், 3,29,504 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 1,68,793 பேர் மீட்கப்பட்டனர். 2020ல் 79,233 சிறுமிகளும் 3,44,422 பெண்களும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 2,24,043 பெண்கள் மீட்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு மீட்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. 2021 ஆம் ஆண்டில், 90,113 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் மற்றும் 58,980 பேர் மீட்கப்பட்டனர். 3,75,058 பெண்கள் காணாமல் போயுள்ளனர், 2,02,298 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கேட்கும்போதே கண் கலங்குது.. 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! குப்பையோடு குப்பையாக வீசிய கொடூரன்!

மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக இந்தியாவிலேயே 2019 முதல் 2021 வரை 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக என்சிஆர்பியால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் இருந்து அதே காலகட்டத்தில் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் இந்த காலகட்டத்தில் காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில், மூன்று ஆண்டுகளில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் சத்தீஸ்கரில் இருந்து 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து அதே காலகட்டத்தில் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும், மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும், ஒடிசாவில், மூன்று ஆண்டுகளில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும், சத்தீஸ்கரில் இருந்து 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில், காணாமல் போன பெண்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் 2019 மற்றும் 2021 க்கு இடையில் 61,054 பெண்களும் 22,919 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். 

திருச்சி அருகே மகளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்

இதுகுறித்து ராஜ்ய சபாவில்  மிஸ்ரா பேசுகையில், ''பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக குற்றவியல் சட்டம் (திருத்தம்), சட்டம் 2013ல் இயற்றப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் சட்டம் திருத்தில் 2018 ஆம் ஆண்டு, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை உட்பட இன்னும் கடுமையான தண்டனை தண்டனை வழங்குவதற்கு பரிந்துரைத்து சட்டம் இயற்றப்பட்டது'' என்றார்.  

மேலும் மத்திய அமைச்சகம் விடுத்து இருக்கும் பத்திரிக்கை செய்தியில், ''காணாமல் போன பெண்களை, சிறுமிகளை கண்டறிவது, பாதுகாப்பு கொடுப்பது முற்றிலும் மாநிலத்தின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை மாநில அரசுகள் சரியாக கடைபிடிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக விசாரிக்க வேண்டும். மகாராஷ்டிரா அரசு மகிளா போலீஸ் கக்சா (மகளிர் உதவி மையக் காவல் நிலையம்), மகிளா சுரக்ஷா சமிதி, மனித கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் கட்டமாக 8 நகரங்களில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் பாதுகாப்பு வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!