அவருக்கு ஒண்ணும் தெரியாது! என்டிஆர் பற்றிய ரஜினியின் பேச்சுக்கு அமைச்சர் ரோஜா பதிலடி

By SG Balan  |  First Published Apr 29, 2023, 9:44 PM IST

என்டிஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடுவைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு பதில் அளித்துள்ள ஆந்திர அமைச்சர் ரோஜா ரஜினிக்கு ஆந்திர அரசியல் பற்றி ஒன்றும் தெரியவில்லை எனச் சாடியுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற என்டிஐஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோரை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். இது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சியினரை சீண்டுவதாக அமைந்துவிட்டது.

இதனால், என்டிஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடுவுக்கு பாராட்டு மழை பொழிந்த தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ரோஜா கடுமையாக பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரோஜா, ரஜினிகாந்துக்கு தெலுங்கு மாநில அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்றும், என்டிஆரின் ஆன்மா அவரது கருத்துகளால் புண்படும் என்றும் கூறினார்.

Tap to resize

Latest Videos

சட்டப்பேரவையில் என்டிஆரை சந்திரபாபு நாயுடு எப்படி அவமானப்படுத்தினார் என்பது குறித்த பதிவுகள் மற்றும் வீடியோக்களை ரஜினிகாந்துக்கு அனுப்புவேன் எனவும் ரோஜா கூறினார். சந்திரபாபு என்டிஆரை ஓவியங்கள் மூலம் அவமதித்ததாகவும் ரோஜா கூறினார்.

மேலும், ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஆனால் அவரது பேச்சு ஆந்திர மாநிலத்திலும் தெலுங்கு தேசம் கட்சியிலும் உள்ள என்டிஆர் ரசிகர்களை காயப்படுத்துவதாக உள்ளதாகவும் அவர் கூறினார். சந்திரபாபு ஆட்சியில் ஹைதராபாத் வளர்ச்சியடையவில்லை எனக் குற்றம் சாட்டிய அமைச்சர் ரோஜா, முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி, ஏழை மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை வழங்கியதாகவும், அவரே தெலுங்கர்கள் வெளிநாட்டில் பணிபுரிவதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

சந்திரபாபுவின் தொலைநோக்கு திட்டம் 2020 மூலம், தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்களே கிடைத்தன எனக் குறிப்பிட்ட ரோஜா அவரது விஷன் 2047ல் சந்திரபாபு எந்த நிலையில் இருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன், சந்திரபாபு 2024ஆம் ஆண்டு முதல்வர் ஆவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ரோஜா திட்டவட்டமாகக் கூறினார்.

click me!