சொந்த அரசை எதிர்த்து முழக்கமிட்ட அமைச்சர் ராஜேந்திர சிங்.. உடனடியாக பதவி நீக்கம் - பாஜக கடும் கண்டனம்!

By Ansgar R  |  First Published Jul 21, 2023, 10:38 PM IST

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெண்களை பாதுகாப்பதில் தனது அரசு தோல்வியடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் அவர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மணிப்பூர் பிரச்னையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் முன், தனது சொந்த இடத்தில் உள்ள பிரச்னையை முதல்வர் கவனிக்க வேண்டும் என்று ராஜேந்திர சிங் கூறியிருந்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்கியுள்ளது. ராஜஸ்தானில் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அசோக் கெலாட் (காங்கிரஸ்) அரசை, பாரதிய ஜனதா கட்சி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளது.

Women empowerment, Congress style, with a dash of Indira Gandhi inspired democratic temperament!

A Minister in Rajasthan Govt is removed for speaking the truth. Mohabbat Ki Dukan offers no space for honest customers it seems. Only the corrupt and liars are welcome in this Dukan!

— BJP (@BJP4India)

Tap to resize

Latest Videos

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவின் பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ராஜஸ்தான் ராஜ்பவன் செயலகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்ய, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், இன்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சரவையில் இருந்து பரிந்துரை செய்ததாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது. 

பட தயாரிப்பில் இன்வெஸ்ட்மென்ட்.. ஏமாற்றப்பட்டாரா நடிகர் விவேக் ஓப்ராய்? - மூன்று பேர் மீது பரபரப்பு புகார்!

உண்மையைப் பேசியதற்காக ராஜஸ்தான் அரசில் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார், இதிலிருந்து அங்கு நேர்மையான உள்ளம் கொண்டவர்களுக்கு இடம் இல்லை என்றும், ஊழல்வாதிகள் மற்றும் பொய்யர்களுக்கு மட்டுமே அங்கு வரவேற்பு உள்ளது என்று தெளிவாக தெரிகிறது என்று கடுமையாக சாட்டியுள்ளது பாஜக அரசு.

சட்டப்பேரவையில் ராஜேந்திர சிங் கூறியது என்ன?

ராஜஸ்தான் சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், மணிப்பூரில் பெண்களின் நிர்வாண வீடியோ குறித்து சற்று காட்டமாக பேசினார். அப்போது அவரை இடைமறித்து பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, தனது அரசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ராஜஸ்தானில் பெண்களை பாதுகாக்க தவறிவிட்டோம், ஆகவே முதலில் நாம் நமது இடத்தை குறித்து கவலைப்பட வேண்டும். பிறகு தான் அடுத்த மாநிலத்தை பற்றி பேசவேண்டும் என்று கூறியிருந்தார்.

தனது பதவி நீக்கத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர சிங், காங்கிரஸின் நிலை தற்போது சரியில்லை என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகரிப்பு: ஒன்றிய அரசு பதில்!

click me!