விவேக் ஓப்ராயை பட தயாரிப்பில் பணத்தை முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றியுள்ளதாக புகார்
பட தயாரிப்பு மற்றும் பிற விஷயங்களில் முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் பெறலாம் என்று கூறி தன்னிடமிருந்து சுமார் 1.55 கோடி ரூபாயை 3 பேர் அபகரித்துள்ளதாக பரபரப்பு புகார் ஒன்றை பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மும்பை, அந்தேரி கிழக்கில் உள்ள காவல் நிலையத்தில் விவேக் ஓபராய் சார்பாக மூவர் மீது அளிக்கப்பட்ட புகாரை அடுத்து தற்பொழுது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த புகாரில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி ஒரு சினிமா தயாரிப்பாளரும் மற்ற இரு நபர்களும் ஏற்கனவே விவேக் ஓபராயுடன் வியாபார ரீதியாக இணைந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்பொழுது அவர்கள் பட தயாரிப்பில், விவேக் ஓப்ராயை பட தயாரிப்பில் பணத்தை முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றியுள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. அவர்களை நம்பி நடிகர் விவேக் சுமார் 1.55 கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் மேல் 3 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மாபெரும் நடிகர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதாக அளித்துள்ள புகார் பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட லைகா!