அமைச்சர் மீது பாய்ந்தது ‘பினாமி தடை’ச் சட்டம் - ரூ.33 கோடி சொத்துக்கள் முடக்கியது வருமானவரித்துறை

First Published Mar 5, 2017, 10:25 PM IST
Highlights
Minister fired over proxy tataic Law - Rs 33 crore assets Revenue muted


பினாமி சொத்து பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், ரூ.33 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துகள் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமானவை என, தகவல் வெளியாகி உள்ளது.

முடக்கம்

டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில், பொதுப்பணி, போக்கு வரத்து, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு அமைச்சராக உள்ளவர் சத்யேந்திர ஜெயின்.

இந்நிலையில், பினாமி சொத்து பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள சுமார் 17 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் ரூ.16 கோடி மதிப்புள்ள நிறுவன பங்குகளை வருமான வரித் துறை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

நோட்டீஸ்

இதன் இப்போதைய சந்தை மதிப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் இதில் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 90 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு இண்டோ மெடல்இம்பெக்ஸ், அகின்சான் டெவலப்பர்ஸ், பிரயாஸ் இன்போசொலூஷன்ஸ் மற்றும் மங்கல்யதான் புரா ஜெக்ட்ஸ் ஆகிய 4 நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வருமானம் மறைப்பு

இது தவிர, சத்யேந்தர் ஜெயின் தனது வருமானத்தை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரி சட்டத் தின் கீழ் அவரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவருடன் தொடர்புடைய சில நிறுவனங்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றச்சாட்டு

கொல்கத்தாவைச் சேர்ந்த ஜிவேந்திர மிஷ்ரா, அபிஷேக் சொக்கானி மற்றும் ராஜேந்திர பன்சால் ஆகியோர் சத்யேந்தர் ஜெயினிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவரது சார்பில் பங்குகளை வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் வருமான வரித் துறை விசாரணை நடத்தி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, டெல்லி போலீஸாரை பயன்படுத்தி தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

click me!