அருண் ஜெட்லியின் கருத்தால் காரசார வாக்குவாதம்... மாநிலங்களவை 3 முறை ஒத்தி வைப்பு...

First Published Jul 26, 2017, 9:34 PM IST
Highlights
minister arun jetli speek... 3 times post pan in loksabha


விளம்பரத்துக்காக பல்வேறு பிரச்சினைகளில் விவாதம் நடத்த நோட்டீஸ் கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதால் மாநிலங்களவையில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக மூன்று முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா விதி எண் 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை எழுப்ப விரும்பினார். இதே விதியின் கீழ் மேலும் பல உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.

இதில் பல நோட்டீஸ்களுக்கு அனுமதி மறுத்த அவை துணைத் தலைவர் குரியன், ஆனந்த் சர்மாவை மட்டும் பேச அனுமதித்தார். உடனே பேசிய அனந்த் சர்மா, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, இந்திராக காந்தி ஆகியோரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயல்வதாக பா.ஜனதா கூட்டணி அரசு மீது குற்றம் சாட்டினார்.

பி.ஜே.குரியன் சர்மாவின் இந்த நோட்டீசை அனுமதிக்க மறுத்தார். ஆனால், சர்மாவனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய நிதி மற்றும் ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘வெறும் விளம்பரத்துக்காக இது போன்ற நோட்டீஸ்கள் கொடுக்கப்படுவதாக’’ குற்றம் சாட்டினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு இடையே பேசிய அருண் ஜெட்லி, ‘‘டி.வி. கேமராக்கள் பயன் அடைவதற்காக, கேள்வி நேரம் முடிந்ததும் ‘பூஜ்ஜிய நேர’த்தை அவைத் தலைவர் அனுமதிக்கக்கூடாது’’ என்று கேட்டுக்கொண்டார்.

உறுப்பினர் ஆனந்த் சர்மா கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படியும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஜெட்லி, அரசியல் சட்ட அந்தஸ்து பதவி வகிப்பவர்கள் பற்றி பேசுவதற்கு விதிகளில் இடம் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் நேரு போன்ற தலைவர்களை அவமானப்படுத்த அரசு முயற்சிப்பதாகவும், அதே நேரத்தில் விடுதலைப் போராட்டத்தில் தொடர்பு இல்லாதவர்களின் நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

டி.வி. விளம்பரத்துக்காகவே பிரச்சினைகள் எழுப்பப்படுவதாக அருண் ஜெட்லி கூறியது தன்னை மிகவும் புண்படுத்துவதாக தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கூறினார். அவருக்குப் பதில் அளித்த ஜெட்லி, ஒவ்வொரு நாளும் விதிகளுக்கு புறம்பாக உரிமை பிரச்சினைகள் எழுப்பப்படவதாக குறிப்பிட்டார்.

‘சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு’ பிரச்சினையை சில உறுப்பினர்கள் எழுப்ப விரும்பியதுதான் இந்த அமளிக்கு காரணம் என்றும் ஜெட்லி கூறினார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறு்பபினர்கள் மத்திய மண்டபத்துக்கு சென்று அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் கேள்வி நேரத்திற்காக அவை கூடியபோது ஜெட்லி கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் அவைத்தலைவர் ஹமீது அன்சாரியால் 10 நிமிடங்களுக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவைத் தலைவர் ஹமீது அன்சாரியின் அறையில் கூடி முட்டுக்கட்டை குறித்து விவாதித்தனர். இதற்காக மீண்டும் 10 நிமிடங்கள் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சுப்பிரமணியசாமி நோட்டீஸ்

கடந்த 2005-ம் ஆண்டில் நிகழ்ந்த சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் குண்ட வெடிப்பில் சில முக்கிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து விவாதிக்க அனுமதி வழங்கும்படி பா.ஜனதா உறுப்பினர் சுப்பிரமணியசாமி நோட்டீஸ் கொடத்து இருந்தார்.

நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதற்கு இந்த நோட்டீஸ்தான் காரணம் என, அமைச்சர் அருண் ஜெட்லி பேசும்போது குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஜெட்லி, ‘‘சம்ஜாவ்தா பிரச்சினையை சிலர் எழுப்ப விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம்’’ என்று கூறினார்.

click me!