ஆயிரம் ரூபாய் காசு வருவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடையா? மாநிலங்கள் அவையை உலுக்கிய எதிர்க்கட்சிகள்

First Published Jul 26, 2017, 9:17 PM IST
Highlights
one thou sent note relished to governmn ? 2 thou sent noent plat e stooped ? rajyasaba mps protest


நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டை செல்லாது என்று அறிவித்து விட்டு, புதிய ஆயிரம் ரூபாய் காசை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா என்று மாநிலங்கள் அவையில் மத்திய அரசைக் கேள்விகளால் எதிர்க்கட்சிகள் துளைத்து எடுத்தனர்.

அப்போது அவையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அமர்ந்து இருந்த போதிலும், இந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு தடைக்கு பின் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. புதிதாக ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது புழக்கத்தில் இருந்துவரும் நிலையில் சில்லரை தட்டுப்பாடு கடுமையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த 2 ஆயிரம் நோட்டை அச்சடிக்கும் பணியை கடந்த 5 மாதங்களுக்கு முன் நிறுத்திவிட்ட ரிசர்வ் வங்கி, 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யும் திட்டத்துடன் அதை அச்சடித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த புதிய ரூபாய் நோட்டை அடுத்த மாதம் புழக்கத்துக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கிடையே 2 ஆயிரம் நோட்டை தடை செய்யவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பின்பு, சமாஜ்வாதி கட்சி எம்.பி. நரேஷ்அகர்வால் எழுப்பி பேசினார். அவர் பேசுகையில், “  2 ஆயிரம் நோட்டை தடை செய்யப்போவதாக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ரிசர்வ்வங்கியும் 2 ஆயிரம் நோட்டை அச்சடிக்கும் பணியை நிறுத்திவிட்டது.  எந்த வகையான கொள்கை முடிவையும் அரசு எடுக்கும் முன்பு, அது குறித்து நாடாளுமன்றத்தில் அரசு தெரிவிக்க வேண்டும்.

இதுவரை அரசு 3.2 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடித்துள்ளது. இப்போது அச்சடிப்பதை நிறுத்திவிட்டது. ஏற்கனவே ஒரு முறை ரூபாய் நோட்டு தடையை கொண்டு வந்துவிட்டீர்கள், 2-வது முறையாக கொண்டுவரதிட்டமிட்டுகிறீர்களா? ’’ என்றார்.

அப்போது தலையிட்ட துணைத் தலைவர் பி.ஜே. குரியன், “ ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இது இருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அகர்வால், “ரூபாய் நோட்டு தடை என்பது ரிசர்வ் வங்கி பார்த்து எடுக்கவில்லை, அரசு எடுத்த முடிவு. ரிசர்வ் வங்கியின் வாரியம் ரூபாய் நோட்டு தடையை எதிர்த்துள்ளது, ஆனால், இந்த முடிவை எடுக்க அரசு நிர்பந்தித்துள்ளது. முதலாவது ரூபாய் நோட்டு தடையையும் அரசுதான் கொண்டு வந்தது, அடுத்த தடையையும் அரசுதான் கொண்டு வர உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசார் பேசுகையில், “ ஆயிரம் ரூபாய் காசுகளை அறிமுகம் செய்ய இருக்கிறதா அரசு என்பதை தௌிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.1000, ரூ.100, ரூ.200  காசுகள் வரப்போகிறது என நாளேடுகளில் படித்து வருகிறோம். உண்மையில் அதன் நிலைமை என்ன?. இது குறித்து ஊடகங்கள் எழுதுவது உண்மையா?. 

இனிமேல் ஆயிரம் ரூபாய் காசு வாங்க வங்கிக்கு செல்ல வேண்டுமென்றால், பையில்தான் கொண்டு வர வேண்டும். எங்களின் தங்கைகளிடம் சிறிய பர்ஸ்இருக்கிறது. ஆனால், எங்களிடம் இல்லை என்பதால், ஆயிரம் ரூபாய் காசை சுமக்கபர்ஸ் வாங்க வேண்டும். உண்மையைக் கூறுங்கள். இதில் அரசியல் வேண்டாம்’’ எனத் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்கவில்லை.

click me!