ராணுவ வீரர்கள் குறைகளைப் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்!

Asianet News Tamil  
Published : Jan 28, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ராணுவ வீரர்கள் குறைகளைப் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்!

சுருக்கம்

ராணுவ வீரர்கள் குறைகளைப் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்!

ராணுவ வீரர்கள் தங்கள் மனக்குறைகளை நேரடியாக ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத்திடம் முறையிட வாட்ஸ் ஆப் எண் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், தங்களுக்கு தரமில்லாத உணவுகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி சமூகவலைதளப் பக்கத்தில் விடியோ பதிவை வெளியிட்டார்.

இதையடுத்து, சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவ வீரர்களும் சமூகவலைதளப் பக்கத்தில் தங்களது குறைகளை வெளியிட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரர்கள் தங்களது குறைகளை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடக் கூடாது என்று எச்சரித்தார். 

இந்நிலையில், ராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, நிவாரணம் காண்பதற்கு வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 91-9643 3000 08 என்ற எண்ணில் தங்கள் குறைகளை ராணுவ வீரர்கள் பதிவு செய்யலாம் என்றும், ஏற்கனவே ராணுவத்தில் உள்ள குறைதீர்ப்பு உதவி மையங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் ​தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!