நாய் வசிக்கும் இடத்தில் வாழும் புலம்பெயர் தொழிலாளி! அதிர்ச்சி அளிக்கும் கேரளாவின் அவல நிலை!

By SG Balan  |  First Published Jul 21, 2024, 4:59 PM IST

ஷியாம் சுந்தர் இந்தச் சிறிய அறையில்தான் கடந்த நான்கு வருடங்களாக வசிக்கிறார். தான் முதலில் பிறவத்தை அடைந்தபோது தன்னிடம் பணம் இல்லை என்றும் இந்த வீட்டின் உரிமையாளர் 500 ரூபாய்க்கு இந்த அறையை வாடகைக்கு விட்டதாகவும் ஷியாம் சுந்தர் கூறினார்.


கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறவம் பகுதியில் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளர் மிகச் சிறிய அறையில் ஒன்றில் வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளியிடம் ஏசியாநெட் நியூஸ் நடத்திய விசாரணையில், அவர் அறையில் தங்குவதற்கு மாதம் ரூ.500 வாடகையாகச் செலுத்துவதும் தெரியவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் பேரில் ஏசியாநெட் நியூஸ் குழுவினர் பிறவத்தில் உள்ள ஷியாம் சுந்தரின் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு ஷியாம் சுந்தர், உள்ளூர் தலைவர் ஒருவரின் பழைய வீட்டிற்கு அருகில் உள்ள மிகச் சிறிய அறையில் வசிக்கிறார். நாய்களை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த அறைக்கு கிரில் கதவு போடப்பட்டுள்ளது.

ஷியாம் சுந்தர் இந்தச் சிறிய அறையில்தான் கடந்த நான்கு வருடங்களாக வசிக்கிறார். தான் முதலில் பிறவத்தை அடைந்தபோது தன்னிடம் பணம் இல்லை என்றும் இந்த வீட்டின் உரிமையாளர் 500 ரூபாய்க்கு இந்த அறையை வாடகைக்கு விட்டதாகவும் ஷியாம் சுந்தர் கூறினார்.

சின்ன வயசுல தம்பிய பாசமா பாத்துக்கோங்க... தனுஷ் பற்றி பச்சையாகப் பேசி சிரிக்க வைத்த செல்வராகவன்!

ஷியாம் சுந்தரின் சொந்த ஊர் கொல்கத்தாவில் இருந்து ஆறு மணி நேரம் தொலைவில் உள்ளது. பள்ளிக்குச் சென்று படிக்காத ஷியாம் வேலைக்காக புலம்பெயர்ந்து வந்துள்ளார். வசதியான வீட்டுக்கு தன்னால் வாடகை செலுத்த முடியாது என்பதால் இந்தச் சிறிய அறையையே தன் வீடாகக் கொண்டிருக்கிறார்.

அவரது சிறிய அறைக்குள் சமையலறை பொருட்கள், படுக்கை உட்பட தனக்குத் தேவையான அனைத்தும் இருப்பதாக ஷியாம் சுந்தர் கூறுகிறார். மழை மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்க கிரில் கதவுக்கு அட்டையால் மூடி போட்டிருக்கிறார். இந்த சிறிய அறைக்கு 500 ரூபாய் வாடகை வசூலிக்கும் வீட்டு உரிமையாளர் அருகிலேயே வசதியாக வசிக்கிறார்.

இதேபோல, பிறவத்தில் உள்ள பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை வாடகை செலுத்தினாலும் போதிய வசதிகள் கொண்ட வீடு கிடைக்காமல் திணறி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

ஏசியாநெட் மலையாளத்தில் செய்தி வெளியிட்டதை அடுத்து காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் ஷியாம் சுந்தரை சந்தித்துள்ளனர். இது குறித்து விசாரிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் இதுபற்றி விசாரிக்க வீட்டு உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

சீனியர் சிட்டிசன்களுக்கு எக்கச்செக்க வட்டி! முதுமையில் அதிக வருவாய்க்கு கேரண்டி கொடுக்கும் திட்டங்கள்!

click me!