அனைத்து பல்கலை.களிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் , மகப்பேறு விடுப்பு... கேரள உயர்கல்வித்துறை உத்தரவு!!

By Narendran SFirst Published Jan 19, 2023, 8:46 PM IST
Highlights

பெண் மாணவர்களின் வருகை வரம்பு 73 சதவீதமாக நிர்ணயித்து கேரளா உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பெண் மாணவர்களின் வருகை வரம்பு 73 சதவீதமாக நிர்ணயித்து கேரளா உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் 75 சதவீத வருகைப் பதிவை பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால் பெண் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுப்பதாலும் திருமணமானவர்கள் மகபேறு விடுப்ப் எடுப்பதாலும் வருகை பதிவு சதவீதம் குறைவதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெண் மாணவிகள் 73 சதவீத வருகைப் பதிவு இருந்தால், செமஸ்டர் தேர்வெழுதலாம் என்ற சட்டத் திருத்தத்தை முதலில் கொண்டு வந்தது.

இதையும் படிங்க: இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

இந்த முடிவு மாணவிகளுக்கு சற்று நிம்மதி அளிக்கும் என்பதால் பெண் மாணவர்களின் வருகை வரம்பு 73 சதவீதமாக நிர்ணயம் செய்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பும் 18 வயதை கடந்த மாணவிகளுக்கு அதிகபட்சமாக 60 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தயிர் சாப்பிடும் போட்டியில் புதிய சாதனை படைத்த முதியவர்!

பெண் மாணவர்களின் வருகை வரம்பு 73 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாணவிகளுக்கு நிம்மதி கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

click me!