இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Jan 19, 2023, 5:03 PM IST
Highlights

இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 
இளங்கலை நீட் தேர்வு 2023க்கு விண்ணப்பிக்கும் தேதியை தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இளங்கலை நீட் தேர்வு 2023க்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை neet.nta.nic.in இல் நிரப்ப முடியும். 

இதையும் படிங்க: 80 வயதிலும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட சூப்பர் பாட்டி!

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • neet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • NEET UG 2023 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் உள்நுழைவு விவரங்களை உருவாக்கி உள்நுழையவும்.
  • விண்ணப்ப படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: எங்களுக்கு வாக்கு வங்கி முக்கியமல்ல, வளர்ச்சிதான் முன்னுரிமை : பிரதமர் மோடி பேச்சு

தேர்வு தேதி:

சமீபத்தில், தேசிய தேர்வு முகமை (NTA) JEE Mains, CUET UG மற்றும் NEET UG உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வின் முழு தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட அட்டவணையின்படி, NEET UG 2023 மே 7, 2023 அன்று நடைபெற உள்ளது. பதிவு தேதிகள், திருத்தம் செய்யும் சாளரம், கட்டணம் செலுத்தும் தேதிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தகுதி:

  • நீட் தேர்வுக்கு அதிக வயது வரம்பு இல்லை. இருப்பினும், விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது ஜனவரி 31, 2023 அன்று 17 வயதாக இருக்க வேண்டும். 
  • PCB (Physics, Chemistry, Biology) உடைய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்குத் தகுதியுடையவர்கள். 
click me!