Raghuram Rajan: Rahul: ராகுல் காந்தி ஒன்னும் ‘பப்பு’ அல்ல! ரகுராம் ராஜன் பாய்ச்சல்

Published : Jan 19, 2023, 05:01 PM IST
Raghuram Rajan: Rahul: ராகுல் காந்தி ஒன்னும் ‘பப்பு’ அல்ல! ரகுராம் ராஜன் பாய்ச்சல்

சுருக்கம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒன்றும் பப்பு அல்ல, அவர் மீது அந்த தோற்றம் விழுந்தது துரதிர்ஷ்டமானது. ராகுல் காந்தி ஸ்மார்ட்டான மனிதர் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒன்றும் பப்பு அல்ல, அவர் மீது அந்த தோற்றம் விழுந்தது துரதிர்ஷ்டமானது. ராகுல் காந்தி ஸ்மார்ட்டான மனிதர் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்

ராகுல் காந்தி நடத்திவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் நடந்தபோது, ரகுராம் ராஜனும் பங்கேற்று நடந்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 2013ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜன், பாஜக ஆட்சிக்கு வந்தபின், 2016ம் ஆண்டு தனது பதவியிலிருந்து விலகினார். 

எங்களுக்கு வாக்கு வங்கி முக்கியமல்ல, வளர்ச்சிதான் முன்னுரிமை : பிரதமர் மோடி பேச்சு

இந்நிலையில் டாவோஸ் நகரில் நடந்துவரும் உலகப் பொருளதார மன்றத்தில் ரகுராம் ராஜனும் பங்கேற்றார். அப்போது அவர் இந்தியா டுடே இதழுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி குறித்தும், அவரை  பப்பு என எதிர்க்கட்சிகள் பேசுவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரகுராம் ராஜன் பதில் அளிக்கையில் “ ராகுல் காந்தி மீது பப்பு என்ற வார்த்தை பதிந்துவிட்டது துரதிர்ஷ்டமானது. ராகுல் காந்தி பப்பு அல்ல, ஸ்மார்டான மனிதர். கடந்த 10 ஆண்டுகளாக, பல்வேறு தருணங்களில் அவருடன் நான் பேசியிருக்கிறேன், கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறேன். அவரை பப்பு என சொல்லவே முடியாது. இளைமையான, ஆர்வமுள்ள மனிதர் ராகுல் காந்தி. 

15 ஆண்டுகள் பழமையான அரசு பஸ், லாரிகளை ஏப்ரல் 1 முதல் இயக்கத் தடை: மத்திய அரசு அதிரடி

நாம் எப்போதுமே முன்னுரிமைகள் என்ன, அடிப்படை இடர்கள் மற்றும் அவற்றை மதிப்பிடும் திறன் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.இந்த விஷயங்களை ராகுல் காந்தி சிறப்பாகச் செய்வார், அதற்கான தகுதியும் அவருக்கு இருக்கிறது. 

நான் இவ்வாறு பேசுவதால் எந்தக் கட்சியிலும் சேர்ந்துவிட்டதாக இல்லை. நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. பாரத் ஜோடோ யாத்திரையின் மதிப்பை உணர்ந்துஅதில் பங்கேற்றேன்” எனத் தெரிவித்தார்
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு மற்றும் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளை ரகுராம் ராஜன் கடுமையாக விமர்சித்திருந்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!