கர்நாடகா அரசு மீது வழக்கு.... தமிழகம் அதிரடி முடிவு...!

By vinoth kumarFirst Published Nov 27, 2018, 3:26 PM IST
Highlights

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வழக்கு தொடர்வது பற்றி மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வழக்கு தொடர்வது பற்றி மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 5000 கோடி திட்ட மதிப்பீட்டில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் கர்நாடக அரசு ஏற்கனவே சமர்பித்து இருந்தது. அணை அமையும் இடம், அணையின் பரப்பளவு உள்ளிட்ட அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் கர்நாடாக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு இன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து வரைவு அறிக்கையின் அடிப்படையில் காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு டெல்டா விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அணை கட்ட ஒப்புதல் தரக்கூடாது, வரைவு அறிக்கை ஒப்புதலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அணை கட்ட கர்நாடகம் முயற்சிப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!