
மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் சபரிமலை விவகாரத்தில் நடந்துக்கொண்ட பாத்திமா ரெஹானா இன்று கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, சென்ற அக்டோபர் மாதம் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது, இருமுடி அணிந்துகொண்டு கருப்பு உடையில் ஐயப்ப பக்தர் போன்று ரெஹானா கோயிலுக்கு செல்ல முயன்றார்.
அதன் பின்னர் அவருக்கு எழுந்த பலத்த எதிர்ப்புகளால் அவரை பத்திரமாக வீடு திரும்ப செய்தனர் போலீசார். அதன்பின் சில சர்ச்சை கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மத நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நடந்துக்கொண்டார்.
பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் ரஹானே நடந்துக்கொண்டு இருந்ததால், அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை அடுத்து பத்தனம்திட்டா போலீசார் ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதற்காக முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினார் ரஹானே.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்தது மட்டுமல்லாமல், அவர் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்து இருந்தது.இதனை தொடர்ந்து ரஹானேவை கைது செய்தனர் போலீசார்.