
மேகாலயா மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 375 வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர். இங்கு பிப்ரவரி 27ஆம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
சோஹியாங் தொகுதியில் மட்டும் ஒரு வேட்பாளர் உயிரிழந்துவிட்டதால் அந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும் மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ஹெச். டி. ஆா். லிங்டோ பிப்ரவரி 20ஆம்த தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. எல்லா தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் மோதுகின்றன.
Tripura Exit Poll Results 2023: திரிபுரா தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்
இந்தத் தேர்தலில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியில் இருக்கின்றனர். இந்த நால்வரில் ஒருவர் வென்றால் அவர் மேகாலயா மாநிலத்தின் சட்டப்பேரவையின் முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமையைப் பெறமுடியும். எனவே இவர்கள் போட்டியிடும் தொகுதிகள் மீது கூடுதல் கவனம் விழுந்திருக்கிறது.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கும் மார்ச் 2ஆம் தேதி ஒரே நாளில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. நாகாலாந்தில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை.
இந்நிலையில், மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பாஜக - 9
என்பிபி - 24
காங்கிரஸ் - 4
மற்றவை - 22
பாஜக - 5
என்பிபி - 22
காங்கிரஸ் - 3
மற்றவை - 29
என்பிபி - 21
காங்கிரஸ் - 9
பாஜக - 6
மற்றவை - 6
என்பிபி - 14
காங்கிரஸ் - 9
பாஜக - 5
மற்றவை - 31
Nagaland Exit Poll Results 2023: நாகாலாந்து தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்