Tripura Exit Poll Results 2023: திரிபுரா தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்

By SG Balan  |  First Published Feb 27, 2023, 7:12 PM IST

பிப்ரவரி 16ஆம் தேதி முடிந்த திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு விவரம் வெளியாகியுள்ளது.


திரிபுரா மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது. இதில் 28.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர். இங்கு பிப்ரவரி 16ஆம் தேதியே வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. அதில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆளும் கட்சியான பாஜக 55 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

Latest Videos

undefined

பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்டுகள் 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் தங்கள்  வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் போட்டி போடுகிறார். திரிபுரா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த தேப் வர்மாவின் திப்ரா மோத்தா என்ற கட்சியை 42 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் 28 தொகுதிகளில் போட்டியில் உள்ளது.

Nagaland Exit Poll Results 2023: நாகாலாந்து தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கும் மார்ச் 2ஆம் தேதி ஒரே நாளில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. திரிபுராவில் பெரும்பான்மை பெற 31 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. 

Axis My India:

பாஜக கூட்டணி > 36-45 தொகுதிகள்

கம்யூனிஸ்ட் > 6-11 தொகுதிகள்

திப்ரா மோத்தா > 6-16

காங்கிரஸ் > 0 தொகுதிகள்

Times Now exit polls:

பாஜக கூட்டணி > 24

காங். + கம்யூ. கூட்டணி > 21

திப்ரா மோத்தா > 14

மற்றவை 1

Matrize exit polls:

பாஜக கூட்டணி > 29-36

காங். + கம்யூ. கூட்டணி > 13-21

திப்ரா மோத்தா > 11-16

மற்றவை 0-3

Megalaya Exit Poll Results 2023: மேகாலயா தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்

click me!