குஜராத் மாநிலத்தை சேர்ந்த புவன் பாம் என்பவர் இந்தியாவின் பணக்கார யூ-டியூபராக அறியப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.122 கோடி.
இசையை கேட்க, பாடல்களை பார்த்து ரசிக்க, சமையல் டிப்ஸ் பார்க்க என அனைத்துக்கும் யூ-டியூபையே நாம் அனைவரும் அணுகி வருகிறோம். அதுவே, கண்டெண்ட் கிரியேட்டர்ஸ்களுக்கு யூ-டியூப் புகழை தேடித் தருவதுடன் பணம் சம்பாதித்து தரும் தளமாகவும் விளங்குகிறது. இதனாலேயே பலரும் புதிதாக யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்க ஆசைப்படுகிறார்கள். அப்படி இருப்பவர்கள் புவன் பாம் என்பவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ரூ.122 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார யூ-டியூபராக அறியப்படும் இவரது வெற்றிக் கதை பலருக்கும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்தவர் புவன் பாம். வேடிக்கையான குறுகிய வீடியோ தொடரான பிபி கி வைன்ஸ் மூலம் நன்கு அறியப்படுபவர் புவன் பாம். அதில் அவர் பல கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அப்போதிருந்தே இணைய உலகில் தனக்கென ஒரு பிராண்டை உருவாக்கினார்.
undefined
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த புவன் பாம், இசையமைப்பாளராக சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அத்துறையில் மிகவும் கஷ்டப்பட்டும் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. தொடக்க காலத்தில் கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் இசைக்கலைஞராக பணியாற்றிய அவர், மாதம் ரூ.5000 மட்டுமே சம்பாதித்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் தனது இசைப் பயணத்தை கைவிட முடிவு செய்த அவர், கண்டெண்ட் கிரியேஷனுக்கான புதிதாக யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். தற்போது இந்தியாவின் பிரபலமான யூ-டியூபராக அவர் மாறியுள்ளார். யூடியூப்பில் புவன் பாமின் முதல் வீடியோ ஒரு நகைச்சுவை வீடியோதான். காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபரிடம் பத்திரிகையாளரின் கேள்விகளை மையப்படுத்தி காமெடி வீடியோ ஒன்றை அவர் முதன்முதலில் பதிவிட்டார்.
சிறையில் சந்திரபாபு நாயுடு.. ஒரே சிரிப்பு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகை ரோஜா - வைரல் வீடியோ
இதற்குப் பிறகு, அவர் தனது பிபி கி வைன்ஸ் என்ற தொடரைத் தொடங்கினார். அதில் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கதாபாத்திரங்களில் நடித்து சிறிய வீடியோக்களை வெளியிட்டார். தற்போது அந்த சேனலுக்கு 26 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அவரது சொத்து மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.122 கோடி.
மாதம் ரூ.5000 சம்பாதித்து, தனது திறமைகள் மூலம் தற்போது ரூ.122 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கும் புவன் பாம், நிச்சயம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் நபர்தான் என்பதில் சந்தேகமில்லை.