ஊழல் வழக்கில் சிறை சென்ற சந்திரபாபு நாயுடு சிறைக்கு சென்ற நிலையில், பட்டாசு வெடித்து அமைச்சர் ரோஜா கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்றிரவு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பந்த் காரணமாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அனைத்தும் மூடியிருக்கின்றன. பேருந்துகள் இயங்கவில்லை. திருப்பதி - திருமலை இடையே மட்டும் ஒன்றிரண்டு வாகனங்கள் இயங்குகின்றன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.
இதனிடையே ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல், தர்ணாவில் ஈடுபட முயற்சிப்பதும் அவர்களைப் போலீஸார் கைது செய்வதும் நடைபெறுகிறது. தெலுங்கு தேசக் கட்சியின் எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா சந்திரபாபு நாயுடு கைதை கொண்டாடி வருகிறார். நகரியில் அமைச்சர் ரோஜா, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மற்றும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!
“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி