
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார் மிகச்சரியான தேர்வு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் 17 ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ராம்நாத் தலித்தாக இருந்தாலும் தலித்துகளுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்த திருமா, இப் பிரச்சனையில் பாஜக நாடகமாடுகிறது என தெரிவித்தார்.
இதனிடையே மீராகுமாரின் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க மீரா குமார்தான் தான் சரியான தேர்வு என்று தெரிவித்தார்.
மேலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிலைப்பாடு வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.