
காதலை மறுத்த மாணவியை கல்லூரி வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மாணவர் தன்னையும் எரித்து தற்கொலை செய்து கொண்டார். கேரளாவில் நடந்த இந்த சம்பவம் இந்தியா முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வந்த லட்சுமி என்ற மருத்துவ மாணவியும், ஆதர்ஷ் என்பவரும் சில காலம் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த லட்சுமியின் பெற்றோர் குடும்ப நிலையை சொல்லி காதலை கைவிட சொல்லியுள்ளனர். தான் டாகடர் ஆவதே லட்சியம் எனபதால் லட்சுமியும் தனது காதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
ஆனால் லட்சுமியின் காதலை மறக்கமுடியாத ஆதர்ஷ் தொடர்ந்து லட்சுமியை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். லட்சுமி தனது குடும்ப சூழ்நிலையை சொல்லி அவர் காதலை மறுத்துள்ளார். முதலில் காதலித்து விட்டு இப்போது பின் வாங்குகிறாயே என்று ஆதர்ஷ் கோபமடைந்துள்ளார்.
மருத்துவ படிப்பையும் தொடராமல் அரியர்ஸ் வைத்திருந்த ஆத்ர்ஷ் நேற்று அரியர் தேர்வு எழுத மருத்துவக் கல்லூரிக்கு வந்துள்ளார். ஒரு திட்டத்துடன் கல்லூரியில் இருந்த ஆதர்ஷ் லட்சுமியின் வகுப்பறைக்கு கையில் பெட்ரோல் கேனுடன் சென்றுள்ளார்.
லட்சுமியிடம் உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி அதே பழைய கதையை பேசியுள்ளார். ஆனால் லட்சுமி மருத்துவம் படிக்கவேண்டும் மற்றதெல்லாம் பிறகு என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதர்ஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை லட்சுமியின் மீது ஊற்றியுள்ளார்.
பெட்ரோல் ஊற்றிய நிலையில் தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவரை துரத்திப் பிடித்த ஆதர்ஷ், கல்லூரியின் நூலகத்தில் வைத்து அவருக்கு தீ வைத்துள்ளார். இதில் தீயில் கருகிய லட்சுமி கூச்சலிட்டுள்ளார். அவரை சில மாணவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. லட்சுமி முழுதும் எரிந்து பிணமானார்.
லட்சுமி மீது தீவைத்து விட்டு நூலகத்திற்கு வெளிய ஓடி வந்த ஆதர்ஷ், தன் மீதும் தீ வைத்துக் கொண்டார் இதில் அவரும் தீயில் எரிந்தார். உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவர்கள் 2 பேரும் அதே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தனக்கு கிடைக்காத காதலி குடும்பத்துக்காக மருத்துவம் படித்து காப்பாற்றட்டும் என்ற எண்ணம் இல்லாமல் கொடூர எண்ணத்துடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.