கோவா, பஞ்சாப்பில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு – சூறாவளியாக சுற்றும் வேட்பாளர்கள்

First Published Feb 2, 2017, 10:40 AM IST
Highlights


உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கண்ட மாநிலங்களில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் சூறாவளியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவா மற்றும் பஞ்சாம் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிதவு நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. அனைத்து  மாநில வாக்குப்பதிவு எண்ணிக்கை மார்ச் 11ம் தேதி நடத்தப்படும். அதில், முடிவுகள் வெளியாகும்.

இதனால், அனைத்து கட்சியினரும் அனல் பறக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு அனைத்து பகுதிகளிலும் போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

click me!