Russia Ukraine War: உக்ரைனில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் தங்களின் இடங்களிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தொடுத்த நிலையில், 10 வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.உக்ரைன் தலைநகரை கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் கார்கீவ், கேர்சன், மரியுபோல், சுமி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடந்து குண்டுகளை பொழிந்து வருகிறது ரஷ்ய படை.
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்கு ஆப்ரேஷன் கங்கா என்று பெயரிட்டு பல்வேறு தூரித நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது. அண்மையில் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்தார்.
போர் காரணமாக உக்ரைன் நாட்டில் வான்பரப்பில் பயணியர் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஏனெனில் ரஷ்ய படை தொடந்து ஏவுகணைகள் மூலம் வான்வழித்தாக்குதலை தொடந்து வருகிறது. இச்சூழலில், உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியை நாடிய இந்தியா, மாணவர்களை மீட்க ஒரு திட்டம் வகுத்தது. அதன் படி, போலந்து, ரூமேனியா, ஹங்கேரி,ஸ்லோவாகியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் இந்திய தூதரகம் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டன. பின்னர், உக்ரைனிலிருந்து இந்தியர்கள் குழுக்கள் குழுக்களாக, தரை வழியாக உரிய பாதுக்காப்புடன் அண்டை நாடுகளின் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டன.அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் வந்தடைந்தனர்.
ஆபரேஷன் கங்கா செயல்திட்டத்தின் மூலம் முதல் நடவடிக்கையாக, கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மதியம் 1.55 மணியளவில் ரூமேனியா நாட்டின் தலைநகரிலிருந்து 219 இந்தியர்களுடன் முதல் விமானம் அன்றிரவு 7. 50 மணியளவில் இந்தியா வந்தடைந்தது. மேலும் இந்த மீட்பு நடவடிக்கையில் இந்திய தேசிய பேரிடர் மீட்பு படை, சி- 17 எனும் விமானப்படை போன்றவை ஈடுப்படுத்தப்பட்டன. இந்த செயல் திட்டத்தின் மூலம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் இன்று வரை 7000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மேலும் 7,400 க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனின் வடக்கு பகுதியான கிமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் அங்கிருந்து இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து எல்லை நோக்கி நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுடன் அமைச்சகமும், இந்திய தூதரகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது. சண்டைத் தீவிரமாக நடப்பதால் இச்சூழலில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Ukraine Russia War: பிறந்த நாளை கேக் வெட்டிய கொண்டாடிய நண்பர்கள்.. போரிலும் பூத்த அன்பு பரிமாற்றம்..