கொரோனா பரவலில் இந்தியாவின் வூஹானாக மாறும் நகரம்..?

By karthikeyan VFirst Published Apr 27, 2020, 10:33 PM IST
Highlights

கொரோனா பரவலில் ஆக்ரா, இந்தியாவின் வூஹானாக மாறும் அபாயம் இருப்பதாக மாநகர மேயர் முதல்வருக்கு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை கிளப்பியிருப்பதுடன், செம வைரலாகிவருகிறது. 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 886 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதுடன், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 1101 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

ஆனால் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டிருக்கிறது. 

இந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உத்தர பிரதேசத்தில் பாதிப்பு ஓரளவிற்கு பரவாயில்லை என்றே கூற வேண்டும் ஏனெனில் 75 மாவட்டங்களை கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். ஆனால் அங்கு 1868 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு பாராட்டியிருந்தது. இந்நிலையில், ஆக்ரா மேயர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதியுள்ள கடிதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவில் இதுவரை 381 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு ஆக்ரா மேயர் எழுதியுள்ள கடிதத்தில், ஆக்ராவில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் சரியாக மேற்கொள்ளவில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்குடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் கொரோனா தடுப்பு பணிகள் திறம்பட மேற்கொள்ளப்படவில்லை. இதே நிலை நீடித்தால், இந்தியாவின் வூஹானாக(சீனாவில் கொரோனா உருவான நகரம்) ஆக்ரா மாறிவிடும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!