புருஷன் குடிச்சுட்டு வந்தா சும்மா வெளுத்து வாங்குங்க…மணமகளுக்கு உருட்டுக்கட்டை பரிசளித்த அமைச்சர்….

 
Published : May 01, 2017, 06:45 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
புருஷன் குடிச்சுட்டு வந்தா சும்மா வெளுத்து வாங்குங்க…மணமகளுக்கு உருட்டுக்கட்டை பரிசளித்த அமைச்சர்….

சுருக்கம்

mathya predesh minister

புருஷன் குடிச்சுட்டு வந்தா சும்மா வெளுத்து வாங்குங்க…மணமகளுக்கு உருட்டுக்கட்டை பரிசளித்த அமைச்சர்….

கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் அவரை நய்யப் டைக்கும் வகையில் திருமண விழாவில் மணமகள்களுக்கு மத்திய பிரதேச அமைச்சர் கோபால் பார்கவா உருட்டும் கட்டைகளை பரிசாக வழங்கினார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில்  அரசின் சார்பில்  700 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இத்திருமணத்தில் பங்கேற்ற அம்மாநில அமைச்சர் கோபால் பார்கவா அனைத்து ஜோடிகளுக்கும் மரத்திலான சிறிய பேட் ஒன்றை பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் , குடித்துவிட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது இந்த கட்டைதான் பேச வேண்டும் என தெரிவித்தார்.. குடும்பத் தலைவன் குடித்தால் அவன் வன்முறையாளனாக மாற வாய்ப்புள்ளது என்றும்  மனைவிகள் அதை தடுக்கும் வகையில் கணவன் குடித்துவிட்டு வந்தால் இந்த கடையை வைத்து வெளுத்து வாங்கிவிடுங்கள் என அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மேலும், 10,000 பேட்கள் தயார் செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் புதிதாக திருமணம் ஆகும் ஜோடிகளுக்கு விநியோகிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் பரிசளித்த அந்த பேட்டில் , குடிப்பவர்களை அடிப்பதற்காக…..போலீஸ் தலையிடக்கூடாது…  என எழுதப்பட்டிருந்ததது.

அமைச்சர் பார்கவாவின்  இந்த விநோத நடவடிக்கை   நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!