‘போராட்டத்தைக் கைவிட வில்லை; வியூகத்தை மாற்றி இருக்கிறேன்’ - ஆயுதப்படை சிறப்பு சட்டம் குறித்து இரோம் சர்மிளா கருத்து

 
Published : Feb 19, 2017, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
‘போராட்டத்தைக் கைவிட வில்லை; வியூகத்தை மாற்றி இருக்கிறேன்’ - ஆயுதப்படை சிறப்பு சட்டம் குறித்து இரோம் சர்மிளா கருத்து

சுருக்கம்

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் போராளி இரோம் சர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடவில்லை, வியூகத்தை மட்டுமே மாற்றி இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

மணிப்பூரில் பாதுகாப்புபடைக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்புப் படைச் சட்டத்தை எதிர்த்து இரோன் ஷர்மிஷா 16 ஆண்டுகளாக போராடி, உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில், தனது உண்ணாவிரதத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முடித்துக் கொண்டார்.

தேர்தலில் போட்டி

இந்நிலையில், மணிப்பூரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தொபால் தொகுதியில் முதல்வர் இபோபி சிங், பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.பாசந்தா சிங் ஆகியோரை எதிர்த்து தனது மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி சார்பில் ஷர்மிளா போட்டியிடுகிறார்.

வியூகம் மாற்றம்

இந்நிலையில், இம்பாலில் இரோம் சர்மிளா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தபோது கூறுகையில், “ ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிரான எனது 16 ஆண்டு கால போராட்டத்தை நான் கைவிடவில்லை, அதன் வியூகத்தை மட்டுமே மாற்றி இருக்கிறேன். எங்கள் கட்சியில் யாராவது ஒருவர் வென்றால், மணிப்பூர் சட்டசபையில்  சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை எதிராக குரல் கொடுப்போம்.

போராட்டம் தொடரும்

இந்த தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தாலும், எங்களின் போராட்டம் தொடரும். அரசியலில் தொடர்ந்து இருப்போம், அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். தேர்தலில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் ஒரு விசயமாக இல்லாவிட்டாலும், அதை நான் முன்னிலைப்படுத்துவேன், இதுபோல் கொடுரமான மனித உரிமைகள் மீறும் சட்டத்துக்கு எதிராக போராடுவேன்.

சாதிக்கவில்லை

கடந்த 16 ஆண்டுகளாக நான் எதையும் சாதிக்கவில்லை, மணிப்பூர் மக்கள் எனது போராட்டத்தை தவறாக நினைக்கத் தொடங்கியதால், நான் எனது உணர்ச்சிகரமான போராட்டத்ைதக் கைவிட்டேன்.

ஆனால், சிலர் எனது உண்ணாவிரதம் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். என்னை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர்.

சேரமாட்டேன்

மாநிலத்தில் பொருளாதார தடையை ஏற்படுத்தி, ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறவிடாமல், காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் சதித்திட்டம் தீட்டி வருகின்றன.

இந்த தேர்தலுக்குபின் காங்கிரஸ், அல்லது பாரதிய ஜனதாவில் சேரும் எண்ணம் கிடையாது.  ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கும் கட்சிகளுடன் சேருவேன்'' எனத் தெரிவித்தார்.

ஆம்ஆத்மி கட்சியினர் நன்கொடை

இரோம் சர்மிளாவுக்கு ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே ரூ. 50 ஆயிரம் நன்கொடை அளித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப்பின் சங்ரூர் தொகுதி எம்.பி.யும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பகவந்த் மான் தனது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ள சர்மிளா “ மான் சாருக்கு மிக்க நன்றி, எங்களுடைய பிரசாரத்துக்கு ஆதரவு அளித்த உங்களுக்கு நன்றி. மணிப்பூரை மாற்றுவோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!