நடிகை பாவனாவுக்கு ஆதரவாக கொந்தளித்த கேரள திரையுலகம்

 
Published : Feb 19, 2017, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
நடிகை பாவனாவுக்கு ஆதரவாக கொந்தளித்த கேரள திரையுலகம்

சுருக்கம்

டுவி்ட்டரில் நடிகை மஞ்சு வாரியார் வெளியிட்ட பதிவில், “ இதுபோன்ற மோசமான, வருந்தக்கூடிய சூழலிலும் நடிகை பாவனா துணிச்சலுடன் நின்று புகார் செய்துள்ளார்.

அவரின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன். காரில் கடத்தப்பட்டு அவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். ஒரு நடிகைக்கு ஏற்பட்ட நிலை என்று கருதாமல், பெண்கள் மீதான தாக்குதலாக பார்க்க வேண்டும்’’ என்றார். 


துல்கர் சல்மான்:(நடிகர்)
டுவிட்டரில் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட செய்தியில், “ நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமையான செயலை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. இதை வெறும் சமூக ஊடகங்களில் கருத்துக்கூறிவிட்டு செல்ல முடியாது. நமக்கு ஏற்பட்ட பாதிப்பாக பார்க்க வேண்டும். நம் மாநிலத்தின் மீதும், பாதுகாப்பான சமூகமாக இருக்கிறது என்றும் மதிப்பு வைத்து இருந்தேன்.

குறிப்பாக நாம்  பெண்களை நடத்தும் விதம் குறித்து நான் பெரும் கொண்டு இருந்தேன்.  ஆனால், நேற்று நடந்த சம்பவம் அதை அழித்துவிட்டது’’ என்றார். 


பிரிதிவிராஜ்(நடிகர்)
நடிகர்  பிரிதிவி ராஜ் வெளியிட்ட அறிக்கையில், “ சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதால், பாவனாவுக்கு நிகழ்ந்த நிகழ்வை நினைத்து வெட்கப்படுகிறேன். அதேசமயம், அவர் துணிச்சலாக வந்து போலீசில் புகார் செய்ததை பாராட்டுகிறேன்.

இந்த நேரத்தில் அனைவரும் பாவனாவுக்கு உடன் இருந்து, அவர் மீண்டு வர துணை நிற்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, கீது மோகன்தாஸ், நடிகர் டோவினோ தாமஸ், உன்னி முகுந்தன் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு

கேரளா போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா கூறுகையில், “ நடிகை பவனா பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைப்படையை அமைத்துள்ளோம்.

இது தொடர்பாக 3  பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும், சிலரிடம் விசாரணை செய்து வருகிறோம்'' என்றார்.

விரைவில் அனைவரும் கைது
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “ நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய அந்த கும்பல் அனைவரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!