காரில் கடத்தப்பட்ட பாவனா பாலியல் பலாத்காரம் - இதுவரை 3 பேர் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

 
Published : Feb 19, 2017, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
காரில் கடத்தப்பட்ட பாவனா பாலியல் பலாத்காரம் - இதுவரை 3 பேர் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

சுருக்கம்

சினிமா படப்படிப்பு முடிந்து திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் கடத்திய பிரபல நடிகை பாவனாவை கடத்திய ஒரு கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ் படங்கள்

மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடந்து வருபவர் நடிகை பாவான. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, ‘அசல்’, ‘தீபாவளி’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ராமேஸ்வரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து

இந்நிலையில் நடிகை பாவானா தான் நடிக்கும் படத்தின் படப்படிப்பு முடிந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கார் அங்கமாலி அருகே வந்தபோது, ஒரு வேனில் வந்த ஒரு கும்பல் திடீரென பாவான வந்த காரின் மீது மோதியது.

கடத்தல்

அப்போது கார் நின்றவுடன், அந்த வேனில் இருந்த ஒரு கும்பல் நடிகை பாவனாவை அந்த காரில் வைத்து கடத்திச் சென்றனர். மேலும், டிரைவரையும் அடித்து, மிரட்டி காரை ஓட்டச் செய்தனர்.

பாலியல் தொல்லை

கார் செல்லும் போது, பாவனாவுக்கு 2 மணிநேரம் அந்த கும்பல் பாலியல் தொல்லைகள் கொடுத்து, அதை தங்களின் வீடியோ கேமிராவில், படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின் கொச்சி அருகே பழவிராட்டம் பகுதியில் கார் வந்தபோது, டிரைவரை நிறுத்தக் கூறி, அந்த கும்பல் தப்பிச்சென்றது.

புகார்

இதையடுத்து,கொச்சி அருகே திரிகாரா பகுதியில் வசிக்கும் இயக்குநர் லால் வீட்டுக்கு சென்ற பாவனா,  அவரின் உதவியால் கொச்சியில் போலீஸ் ஆணையர் யாதிஸ் சந்திரா, எம். பினோய் ஆகியோரிடம் புகார் அளித்தார். அந்த புகாரையடுத்து, பாவனாவின் டிரைவர் மார்டின் என்பவரை கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம்

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பாவனா சென்ற ஆடி காரை மறித்து அதில் மார்டின், சுனில் குமார் என்ற பல்சர் சுனி உள்ளிட்ட 4 பேர் ஏறியுள்ளனர். ஏறக்குறைய 2 மணிநேரம் காரை மார்டின் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த மற்ற 3 பேரும் நடிகை பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை செல்போன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவப்பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கற்பழிப்பு, கடத்தல், சதி ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2  பேர் கைது

இது தொடர்பாக பாவனாவின் டிரைவர் மார்டின் கைது செய்யப்பட்டார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தின் கோவையில் பதுங்கி இருந்த இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தலைமறைவு

இவர்கள் இருவரும் ஆலப்புழா மாவட்டம், அம்பலப்புலா பகுதியைச்சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவர் தலைமறைவாக உள்ளார் அவரை தேடி வருகிறோம். இதில் சுனில் என்பவர் தான் நடிகை பாவனாவிடம் மார்டினை டிரைவராக சேர்த்துவிட்டுள்ளார். இந்த சம்பவம் நடக்கும் முன் சுனிலும், மார்டினும் ஏறக்குறைய 40 கால் செய்து செல்போனில் பேசியுள்ளனர், மெசேஜ் அனுப்பி உள்ளனர். அதை ஆய்வு செய்து வருகிறோம் '' என்றார்.

PREV
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
IndiGo: இனி எந்த விமானமும் தாமதம் இல்லை..! கண்ட்ரோல் ரூமில் நின்று கண்காணிக்கும் மத்திய அமைச்சர்