கேர்ள் ஃபிரண்டுடன் ஊர்சுற்ற பிடிக்கலையாம்… விமானக் கடத்தல் என இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் கைது!

 
Published : Apr 20, 2017, 06:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
கேர்ள் ஃபிரண்டுடன் ஊர்சுற்ற பிடிக்கலையாம்… விமானக் கடத்தல் என இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் கைது!

சுருக்கம்

Krishna Vamshi Arrest who sent flight hijack threat mail

சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் இருந்து விமானத்தை கடத்த சிலர் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு மிரட்டல் மின்அஞ்சல் விடுத்த நபரை மும்பை போலீசார் ஐதராபாத்தில் இன்று கைது செய்தனர்.

தனது கேர்ள் ஃபிரண்டுன் மும்பை, கோவா என ஊர்சுற்றுவது பிடிக்காமல், மின்அஞ்சலில் இதுபோல் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

கடந்த16-ந்தேதி மும்பை போலீசாருக்கு ஒரு மின்அஞ்சல் வந்தது.அதில்,23 பேர் கொண்ட ஒரு கும்பல் சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய  3 விமானநிலையங்களில் இருந்து விமானத்தை கடத்த திட்டமிட்டு  இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த 3 விமானநிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது, பயணிகள் தீவிர சோதனைக்கு பி ன்பே அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில்,  இந்த மின்அஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அது ஐதராபாத் மியாபூரில் இருந்து அனுப்பப்பட்டதை கண்டுபிடித்தனர். அதன்பின் அந்த மின்அஞ்சலின் சர்வர் எண்ணை வைத்து அந்த மின்அஞ்சல் அனுப்பிய நபரை ஐதராபாத்தில் வைத்து மும்பை போலீசார் இன்று கைது செய்தனர். அந்த நபர் பெயர் வம்சி கிருஷ்ணா. தனியார் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

அவரிடம் மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் தனது கேர்ள்ஃபிரண்டுடன் டூர் செல்வதை தவிர்க்கவே இதுபோல் மிரட்டல் விடுத்தேன் என்று தெரியவந்தது.

வம்சி கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், பேஸ்புக் மூலம் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் அறிமுகமாகி இருக்கிறார். இருவரும் பேஸ்புக் மூலம் நெருங்கிப் பழகியுள்ளனர்.

இந்நிலையில், அந்த ெசன்னை பெண், தான் மும்பை, கோவாவை சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும், தனக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு ஒரு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுங்கள். மும்பையில் வந்து தன்னைச் சந்திக்கும்படியும், அங்கிருந்து கோவா செல்லலாம் என்று வம்சி கிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.

ஆனால், வம்சி கிருஷ்ணனிடம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் அளவுக்கு பணம் இல்லை. இதையடுத்து, 15-ந்தேதிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு போலியாக விமான டிக்கெட் தயாரித்து, அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், விமானக் டிக்கெட்டை அனுப்பிட்டு, மும்பை போலீசாருக்கும் ஒ   ருபோலி மின்அஞ்சலை கிருஷ்ணன் அனுப்பி உள்ளார்.

அதில், 6 பேர் சென்னை, மும்பை, ஐதராபாத் விமானநிலையங்களில் இருந்து விமானத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த மிரட்டலால், தனது கேர்ள் ஃபிரண்ட் சென்னையில் இருந்து மும்பைக்கு வரமாட்டார் என நினைத்தார்.

ஆனால், இவர் அனுப்பிய மின்அஞ்சலால் பெரிய பரபரப்ப ஏற்பட்டு,  3 விமானநிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வம்சிகிருஷ்ணனின் கேர்ள் ஃபிரண்டம் மும்பைக்கு செல்லவில்லை. இதனால், நிம்மதி அடைந்த வம்சி கிருஷ்ணா,ஏதும் தெரியாது போல் இருந்து கொண்டார்.

இந்நிலையில்,  இந்த மின்அஞ்சலை ஆய்வுசெய்தபோதுதான் அதுபோலி என மும்பை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஐதராபாத்துக்கு நேற்று வந்த மும்பை போலீசார், ஐதராபாத் போலீஸ் உதவியுடன் மியாப்பூரில் இருந்த வம்சி கிருஷ்ணாவை கைது செய்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!