விமானத்தின் பூட்டு பழுதடைந்ததால், பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே உள்ள கழிவறையில் இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
பெங்களூரு, விமானத்தின் பூட்டு பழுதடைந்ததால், பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே உள்ள கழிவறையில் இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்டார். இச்சம்பவம் செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞன் 100 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் சிக்கிக் கொண்டார்.
பெங்களூரு விமான நிலையத்தை அடைந்ததும், கெபா கவுடா விமான நிலையத்தின் பொறியாளர்கள் கழிவறையின் கதவைத் திறந்தனர். SG 268 விமானத்தில் ஒரு அசாதாரண சம்பவம் நடந்தது. மும்பையில் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. அதிகாலை 3.42 மணியளவில் விமானம் பெங்களூரு சென்றடைந்தது. 14டி சீட்டில் இருந்த பயணி, புறப்பட்ட பிறகு கழிவறையைப் பயன்படுத்த முயன்றபோது சிக்கிக்கொண்டார்.
மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!!
விமானம் தரையிறங்கும் போது, பயணியர் கழிவறையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. பயணி ஒருவர் கழிவறைக்குள் சிக்கியது தெரிந்ததும், விமான ஊழியர்கள் கதவை வெளியில் இருந்து திறக்க முயன்றும் முடியவில்லை. குறுகலான இடத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த இளைஞன் பயத்தில் இருந்தார் என்றும், பிறகு கதவை உடைத்து இளைஞரை வெளியே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.