பலே கில்லாடி! அரபு அரசர் பெயரைக் கூறி டெல்லி 5ஸ்டார் ஹோட்டலில் ரூ.23 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப்பான இளைஞர்

By Pothy RajFirst Published Jan 17, 2023, 2:39 PM IST
Highlights

தலைநகர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ்5 நட்சத்திர ஹோட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசரின் தனிப்பட்ட உதவியாளர் எனக் கூறிக்கொண்டு 3 மாதங்கள் தங்கி ரூ.23 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆன இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ்5 நட்சத்திர ஹோட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசரின் தனிப்பட்ட உதவியாளர் எனக் கூறிக்கொண்டு 3 மாதங்கள் தங்கி ரூ.23 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆன இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரக்தைச் சேர்ந்தவர் போல் உடை அணிந்த அந்த இளைஞர்,அபுதாபி அரசர் குடும்பத்தின் தனிப்பட்ட உதவியாளர் எனக் கூறிக்கொண்டு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கினார். 

பிஸ்னஸ், மொபைல் போன் வேண்டாம்! மும்பையில் எளிமையாக வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர்

தன்னுடைய பெயர் முகமது ஷெரீப் என்று கூறிய அந்த இளைஞர், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாள அட்டை, அரச குடும்பத்துக்கு வேலை செய்யும் அடையாள அட்டை ஆகியவற்றை ஹோட்டல் நிர்வாகத்திடம் காண்பித்துள்ளார். 

அரசர் ஷேக் பலா பின் ஜயாத் அல் நஹ்யானின் தனிப்பட்ட பணி காரணமாக டெல்லிக்கு வந்துள்ளதாகக் கூறிய முகமது ஷெரீப் 4 மாதங்கள் வரை தங்க இருப்பதாகக் கூறியுள்ளார். இதனை நம்பியை லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகம், அவருக்கு அறை எண் 427 என்ற சொகுசு அறையை ஒதுக்கியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதிவரை தங்கிய முகமது ஷெரீப் தங்கியுள்ளார். இந்த 4 மாதங்கள் தங்கியது, உணவு சாப்பிட்டது, இதர சலுகைகள் அனுவித்தது என மொத்தம் ரூ.23 லட்சத்து 46 ஆயிரத்து 413 கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ பயணத்தில் அத்துமீறல்! பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் பாய்ந்தார்

கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி ஹோட்டலைவிட்டு யாருக்கும் தெரியாமல் பிற்பகலில் புறப்பட்ட முகமது ஷெரீப் ஹோட்டலில் இருந்த வெள்ளிப்பொருட்களையும் திருடிச் சென்றார். இதன் மதிப்பையும் சேர்த்தால் ரூ.35லட்சமாகும். 

இதற்கிடையே ஹோட்டலில் கட்டணம் செலுத்த நிர்வாகம் முகமது ஷெரீப்பிடம் பணம் கேட்டபோது, காசோலை வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் கொடுத்தபோது, அந்த கணக்கில் பணம் இல்லாமல் பவுன்ஸ்ஆகி திரும்பி வந்தது.

தங்களை ஒருவர் ஏமாற்றிவிட்டதை உணர்ந்த டெல்லி லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகம் அதன்பின் டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளது. அந்த புகாரையடுத்து டெல்லி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

முகமது ஷெரீப் வழங்கிய அடையாள அட்டை, பிஸ்னஸ் கார்டு, ஐக்கிய அரபு அமீரகம் அடையாள அட்டை ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலியானது எனத் தெரியவந்தது. இதுவரை முகமது ஷெரீப் ரூ.11.50 லட்சம் மட்டுமே ஹோட்டல் நிர்வாகத்திடம் கட்டணமாகச் செலுத்தியுள்ளார். ஆனால், மற்ற நிலுவைக் கட்டணம் ரூ.24 லட்சம், ஹோட்டலில் இருந்த வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் என அனைத்தையும் முகமது ஷெரீப் திருடிச் சென்றுள்ளார். இவற்றின் மதிப்பையும் சேர்த்தால் ரூ.35 லட்சமாகும் என புகாரில் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்
இது குறித்து டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ அந்த இளைஞர் அளித்த அடையாள அட்டை அனைத்தும் போலியானது, அரபு அரசர் குடும்பத்தின் உதவியாளரும் அல்ல. ஹோட்டலில் தங்கி ரூ.20 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார்

ஆரம்பமே இப்படியா? பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பலுக்கு என்னாச்சு? உண்மை நிலவரம் என்ன?

அந்த இளைஞர், அந்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியது. கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி பிற்பகல் 1மணிக்கு ஹோட்டலை விட்டு சென்ற இளைஞர் அதன்பின் திரும்பவில்லை.அனைத்துமே முன்கூட்டியே திட்டமிட்டு நடந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவி்த்தனர்

click me!