செம காண்டு.. கழுதைய வச்சு இழுத்தும் யூஸ் இல்ல.. ஷோரூம் முன்பே ஆட்டோவை கொளுத்திய இளைஞர்!

Published : Dec 30, 2025, 10:22 PM IST
E-Rickshaw burnt

சுருக்கம்

பஜாஜ் மின்சார ஆட்டோவின் பேட்டரி கோளாறு, மைலேஜ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த உரிமையாளர், ஷோரூம் வாசலில் தனது ஆட்டோவை தீயிட்டு எரித்தார். இதற்கு முன் கழுதையை வைத்து ஆட்டோவை இழுத்துச் சென்று போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிறுவனத்தைக் கண்டித்து, இளைஞர் ஒருவர் தனது சொந்த மின்சார ஆட்டோவை ஷோரூம் வாசலில் தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூரைச் சேர்ந்த மோகன் சோலங்கி என்பவர், பஜாஜ் நிறுவனத்தின் மின்சார ஆட்டோவை ஒன்றை வாங்கியிருந்தார். வாங்கிய சில நாட்களிலேயே அதன் பேட்டரியில் கோளாறு ஏற்பட்டதாகவும், மைலேஜ் மிகவும் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பலமுறை சர்வீஸ் சென்டரில் புகார் அளித்தும், சரியான தீர்வு காணப்படவில்லை எனத் தெரிகிறது.

கழுதையை வைத்து இழுத்துச் சென்ற அவலம்

தனது விரக்தியை வெளிப்படுத்திய மோகன் சோலங்கி, சில நாட்களுக்கு முன்பு இயங்காத தனது ஆட்டோ ஒரு கழுதையை வைத்து கட்டி இழுத்துக்கொண்டு சர்வீஸ் சென்டருக்குச் சென்றுள்ளார். அப்போதும் நிறுவனம் தரப்பில் முறையான தீர்வு வழங்கப்படாததால், மனமுடைந்த அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

 

 

ஷோரூம் முன் பரபரப்பு

திங்கட்கிழமை அன்று, பஜாஜ் ஷோரூம் வாசலுக்கு தனது ஆட்டோவைக் கொண்டுவந்த மோகன், அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். சில நிமிடங்களில் வாகனம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனைக்கண்டு அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த சம்பவத்தின் போது மோகனின் மனைவி கதறி அழுதுகொண்டிருந்தார். அவரது சகோதரர் இந்த முழு சம்பவத்தையும் தனது மொபைல் போனில் படம்பிடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஷோரூம் நிர்வாகம் மறுப்பு

இது குறித்து ஷோரூம் உரிமையாளர் ஹரிஷ் பண்டாரி கூறுகையில், "வாகனம் முறையாக பரிசோதிக்கப்பட்டது, அதில் எந்த தொழில்நுட்ப கோளாறும் இல்லை. மோகன் எவ்வித அடிப்படை காரணமும் இன்றி முழு வாகனத்தையும் மாற்றிக் கேட்கிறார்," என குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வைரல் வீடியோ மற்றும் புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சோஃபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பிலிருந்த துப்பாக்கி வெடித்து NRI இளைஞர் உயிரிழப்பு!
அன்-ரிசர்வ் டிக்கெட்டுக்கு 3% தள்ளுபடி! ரயில்வேயின் அதிரடி பொங்கல் ஆஃபர்!