Republic Day: தேசிய கொடியுடன் பைக்கில் ஸ்டண்ட் காட்டிய இளைஞர்.. பீதியில் ஓடிப்போன பொதுமக்கள் - வைரல் வீடியோ !!

Published : Jan 27, 2023, 06:49 PM IST
Republic Day: தேசிய கொடியுடன் பைக்கில் ஸ்டண்ட் காட்டிய இளைஞர்.. பீதியில் ஓடிப்போன பொதுமக்கள் - வைரல் வீடியோ !!

சுருக்கம்

பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜனவரி 26 அன்று இந்தியா தனது 74 வது குடியரசு தினம் கொண்டாடியது. பலரும் தங்களது வாழ்த்துக்களை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு பல்வேறு வீடியோக்களை வெளியிட்டனர்.

இதற்கு மத்தியில், உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,இளைஞர் ஒருவர் பைக்கில் பயமுறுத்தும் சாகசங்களைச் செய்து தனது மற்றும் பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள வீடியோ தான் அது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

இந்த அதிர்ச்சி வீடியோவை அங்கித் சிங் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் இளைஞர் ஒருவர், பைக்கில் பயமுறுத்தும் வகையில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த யாரும் அவரைத் தடுக்கவில்லை, மாறாக, அவர்கள் அவரை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

கருப்பு ஜாக்கெட் அணிந்து, முதுகில் தேசியக் கொடியை வைத்துக்கொண்டு, பரபரப்பான சாலையில் பச்சை நிற ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டுவதில் இருந்து இந்த வீடியோ தொடங்குகிறது.  பலரும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற குற்றவாளிகளைக் கையாள்வதற்கு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தாத அரசாங்கத்தை பலரும் விமர்சித்தனர்.

இதையும் படிங்க..முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?

இதையும் படிங்க..கேரளாவில் ஓகே.! தமிழ்நாட்டில் கைதா? பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக - ஓங்கி அடிக்கும் சீமான்

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!