ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கோவிலுக்கு ரூ.100 கோடியை காசோலையாக வழங்கிய நபரால் கோவில் நிர்வாகத்தினர் கலக்கம் அடைந்தனர்.
ஆந்திரா மாநிலம் ஆந்திரா மாநிலம் அடுத்த சிம்மாசலம் பகுதியில் அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்றைய தினம் கோவில் அதிகாரிகள் கோவில் உண்டியலை எண்ணத் தொடங்கினர்.
அப்போது பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்திருந்த காசோலையில் ரூ.100 கோடி என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் வராஹ லக்ஷ்மி நரசிம்ம கோவில் தேவஸ்தானம் என்று எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ.10 என்று எழுதிவிட்டு அதனை அடித்துவிட்டு ரூ.100 கோடி என்று எழுதப்பட்டு இருந்தது. இதனை பார்த்த கோவில் நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியும், சந்தேகமும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேசிய கொடியை தலைகீழாக அச்சிட்டு குடியரசு தலைவரை வரவேற்று அதிகாரிகள்
காசோலையில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அது பெத்தபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு என்பது தெரியவந்தது. மேலும் அவரது வங்கிக் கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருப்பு இருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காசோலை குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கேப்டன் கேப்டன் என்ற முழக்கம் விண்ணை பிளக்க பிறந்த நாளில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்
மேலும் எண்ணப்பட்ட கோவில் உண்டியலில் 1.49 கோடி ரொக்கமும், 80 கிராம் தங்கமும், 10 கிலோ வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.