ஓடும் ரயிலில் பெண்ணின் கண்முன் ஆண் செய்த காரியம்..! பெண் காட்டிய வீடியோ ஆதாரத்தால் கைது..!

Asianet News Tamil  
Published : Oct 24, 2017, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
ஓடும் ரயிலில் பெண்ணின் கண்முன் ஆண் செய்த காரியம்..! பெண் காட்டிய வீடியோ ஆதாரத்தால் கைது..!

சுருக்கம்

man masturbating in mumbai local train arrested

மும்பையில் மின்சார ரயிலில் பெண்ணின் கண்முன் வேண்டுமென்றே முன்னால் சுய இன்பம் அனுபவித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மும்பையில் மின்சார ரயிலில் பெண்களுக்கான பிரத்யேக பெட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்டியில் பயணம் செய்த நபர் ஒருவர், பெண்ணின் கண் முன்னால் கால்சட்டையின் ஜிப்பை கழற்றி அநாகரீகமான முறையில் சுய இன்பம் அனுபவித்து உள்ளார்.

இதைக் கண்ட அந்த பெண், தனது மொபைல் போனில் அதை வீடியோ எடுத்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கியவுடன் அந்த வீடியோவை போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளார்.

பெண் கொடுத்த வீடியோவையும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்திய போலீசார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த க்ருபா படேல் என்ற 30 வயது நபரை இன்று கைது செய்தனர்.

மும்பையில் தினக்கூலியாக வேலை செய்துவரும் க்ருபா படேலை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

Republic Day 2026 : இந்த 5 உரிமைகள் தெரிஞ்சா யாரும் உங்களை ஏமாத்த முடியாது
இந்தியா குடியரசாக மாற 2 வருடம் ஏன் எடுத்தது? குடியரசு தினத்தின் உண்மை கதை