இரவில் சேலை கட்டி பெண்ணாக மாறும் கணவன் - போலீசில் புகார் கொடுத்து நொந்துபோன மனைவி

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
இரவில் சேலை கட்டி பெண்ணாக மாறும் கணவன் - போலீசில் புகார் கொடுத்து நொந்துபோன மனைவி

சுருக்கம்

பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலைக் கட்டிக்கொள்வதால், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.

பொறியாளர் தம்பதி

பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 29 வயதான இவர் அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார்.

கடந்த ஆண்டு அனிதா, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

முதல் இரவிலேயே

இந்நிலையில் வனிதா பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது கணவர் திருமணமான முதல் நாள் இரவே பெண்களைப் போல சேலை அணிந்துகொண்டு உறங்கினார். பெண்ணைப் போல நடந்து கொள்கிறார். மறுநாள் பகலில் மற்ற ஆண்களைப் போல பேண்ட், சட்டை அணிந்துகொண்டு அலுவலகம் சென்றார்.

தன் பாலின சேர்க்கை

பகலில் ஆண்களின் உடையும், இரவில் பெண்களில் உடையும் அணிவதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் எனக்கும் அவருக்கும் பலமுறை சண்டை நடந்துள்ளது.

எனது கணவர் தன் பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்டுள்ளதாக என்னிடமே தெரிவித்தார். எனவே அவரிடம் இருந்து என்னைப் பிரித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார்.

மனநல ஆலோசனை

இதையடுத்து போலீஸார் அங்குள்ள மகளிர் உதவி மையத்திற்கு இருவரையும் அனுப்பி மனநல ஆலோசனை வழங்கினர். அப்போது சுரேஷ் தான் பெண்ணாக மாற விரும்புவதாகவும் தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்துசெல்ல அனுமதிப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து இருவரும் முழு மனதுடன் பிரிந்து செல்ல போலீஸார் அனுமதித்ததாக மகளிர் உதவி மையம் தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

இடஒதுக்கீடு என்பது உரிமையே தவிர, விதிமுறைகளைத் தளர்த்தும் கருவியல்ல..! நீதிமன்றம் அதிரடி..
LPG விலைக்கு வேட்டு வைத்த Cow Dung Revolution! இனி சாணம் இருந்தால் போதும்.. சமையல் இலவசம்?