ஆளுநர் மாளிகை பா.ஜனதா கட்சி அலுவலகம் இல்லை- திரிணாமுல் காங்கிரஸ் ‘விளாசல்’...முதல்வர் மம்தா- கவர்னர் ‘மோதல் வலுக்கிறது’

First Published Jul 5, 2017, 8:53 PM IST
Highlights
Mamtha banarji vs k.n.tripathy

மேற்கு வங்காள ஆளுநர் கே.என். திரிபாதி அரசியலமைப்புச் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டார். ஆளுநர் மாளிகை , பா.ஜனதா கட்சி அலுவலகம் அல்ல என்பது நினைவில் கொள்ள வேண்டும் என்றுதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

கலவரம், பதற்றம்

மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி‘பேஸ்புக்’கில் சர்ச்சைக்குரிய பதிவு வௌியிடப்பட்டது. இதையடுத்து, இரு சமூகத்தினருக்கு இடையே பெரிய அளவில் கலவரம் மூண்டு, வன்முறை வெடித்தது, பஸ்கள், லாரிகள், கார்கள் தீவைக்கப்பட்டன, கடைகள் அடித்த நொறுக்கப்பட்டன. இதையடுத்து, 400க்கும் ேமற்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு, போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குவாதம்

இது தொடர்பாக ஆளுநர் கே.என். திரிபாதி, முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மம்தா குற்றச்சாட்டு

இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று முன் தினம் அளித்த பேட்டியில், “ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டுகிறார். பா.ஜனதா மண்டல தலைவர்போல் தரம்தாழ்ந்து பேசுகிறார். அவர் என்னை அசிங்கப்படுத்தியதை நினைக்கும்போது முதல்வர் பதவியில் இருந்து போய்விடலாம்’’  என்று எண்ணினேன் என்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையும் அறிக்கை வௌியிட்டது.

திரிணாமுல் காங். கண்டனம்

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பர்தாசாட்டர்ஜி, ஆளுநர் திரிபாதியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். கொல்கத்தாவில்நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

இது உ.பி அல்ல

ஆளுநர் திரிபாதி தனக்குரிய அரசியலமைப்பு சட்ட எல்லையை மீறி செயல்பட்டுவிட்டார். முதல்வர் மம்தா பானர்ஜியிடம் அவர் நேற்று பேசிய விதம் அப்படித்தான் இருந்துள்ளது. இது உத்தரப்பிரதேசம் இல்லை என்பதை அவர் மறந்துவிட்டார். ஆளுநர் மாளிகை என்பது, பா.ஜனதாவின் கட்சி அலுவலகம் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள  வேண்டும்.

நினைவு இருக்கிறதா?

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் சபாநாயகராக இருந்தவர் திரிபாதி,  ஒரு வழக்கறிஞரான அவர், மாநிலத்தின் முதல்வர், ஆளுநர் ஆகிய இருவருக்கும்இடையிலான நட்புறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியதை அறிந்திருப்பார்.

தகுதியில்லாத செயல்

அவர் கூறிய அனைத்து விஷயங்களும் மேற்கு வங்காள மக்களை நோகடிப்பதுபோன்றதாகும். இது தொடர்பாக எங்கள் கட்சி ஏற்கனவே எங்கள் கட்சி ஜனாதிபதிபிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆளுநர் பதவிக்கு தகுதியில்லா செயல் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

ஆளுநர் திரிபாதி பா.ஜனதா தலைவர்களை சந்தித்தபின்,  தொலைபேசியில் முதல்வர் மம்தாவை தொடர்பு கொண்டு  பேசியுள்ளார். அப்படி இருக்கும்போது, இருவருக்கும் இடையிலான ரகசிய பேச்சு எப்படி வௌியே கசிந்தது?

மன்னிப்பு கோருங்கள்

ஆளுநர் திரிபாதி தான் நடந்து கொண்ட விதம், முதல்வர் மம்தாவிடம் பேசிய விதத்துக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், எங்கள் கட்சியும், அரசும் கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம்.

ஆளுநர் திரிபாதி முதல்வர் மம்தாவைப் பார்த்து உங்கள் கட்சி உறுப்பினர்களை சரியாக வழிநடத்துங்கள் என்று எப்படி கூற முடியும். இதுபோல் எங்கும் நடந்தது இல்லை. அவர் என பா.ஜனதா செய்தித் தொடர்பாளரா?, அரசியலமைப்புச் சட்ட தலைவரா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!