“பொய்களை பரப்பி வருகிறார் மோடி ” – மம்தா குற்றச்சாட்டு

First Published Nov 25, 2016, 6:06 PM IST
Highlights


கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பை ஒரு சிலர் வரவேற்றாலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது பற்றி பேசிய மம்தா, ரூபாய் நோட்டுகளை தடை செய்ததால் பணப் பரிவர்த்தனையில் மட்டும் ரூ.1.28 லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.  

மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் மோசமாக பாதிப்பட்டுள்ள நிலையில் மோடி சாதாரணமாக இருக்கிறார் என்றும், ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொய்களை பரப்பி வருவதாக  மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

click me!