“மும்பையில் பயங்கர தீ விபத்து” – பல கோடி ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசம்..!!

 
Published : Nov 25, 2016, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
“மும்பையில் பயங்கர தீ விபத்து” – பல கோடி ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசம்..!!

சுருக்கம்

மும்பையின் ஓஷிவாரா பகுதியில் பிரபல பர்னிச்சர் சந்தை உள்ளது. இந்த பகுதியில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவெனப் பரவியதால், சந்தையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், ஏற்பட்ட புகையால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவலறிந்து சுமார் 12  வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு  வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம், குடியிருப்பு பகுதிக்கும் தீ பரவ வாய்ப்பு இருந்ததால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெளியேறும்படி தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!